For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படியெல்லாமா விக்கெட் எடுப்பது... இலங்கை வீரருக்கு அநியாயமா.. பொல்லார்ட்டை திட்டும் ரசிகர்கள்

ஆண்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணி மோதிய முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகாவின் விக்கெட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

வெயில் தாங்கமுடியல..5 கி வரை எடை குறைந்தேன்...லீச் டாய்லெட்டிலேதான் இருந்தார்...பென் ஸ்டோக்ஸ் வேதனை வெயில் தாங்கமுடியல..5 கி வரை எடை குறைந்தேன்...லீச் டாய்லெட்டிலேதான் இருந்தார்...பென் ஸ்டோக்ஸ் வேதனை

இந்நிலையில் போட்டியின் போது தனுஷ்கா குணதிலகா கிறீஸை தொட்டபோதும் அவருக்கு நடுவர் ரன் அவுட் கொடுத்தது பேசுப்பொருளாகியுள்ளது.

 ஒருநாள் போட்டி

ஒருநாள் போட்டி

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி டி20 தொடரை 1 -2 என்ற கணக்கில் இழந்தது. இதனையடுத்து நேற்று நார்த் சவுண்டில் முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணியில் குணதிலகா, கருணரத்னே மற்றும் பந்தரா ஆகியோர் அரைசதம் அடித்தனர். மற்றவர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்காததால், அந்த அணி 49 ஓவர்களில் 232 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.

வெற்றி

வெற்றி

எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் லீவிஸ், சாஹி ஹோ சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். அதிரடியாக ஆடிய ஈவின் லீவிஸ் 65 ரன்களும், ஹோப் 110 ரன்களும் எடுத்தது. பின்னர் வந்த பிராவோவும் ரன் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் அணி 47 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அவுட்

அவுட்

ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் தனுஷ்கா குணதிலகா 55 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் 22ம் ஓவரின் போது பொல்லார்டு வீசிய பந்து குணதிலகாவின் கையில் பட்டு அவர் அருகிலேயே விழுந்தது. பின்னர் குணதிலகா சிங்கிள் எடுக்க முற்பட்டார். ஆனால் பொல்லார்டு பந்தை எடுத்து ரன் அவுட்டாக்க முயற்சித்தார். இதனால் சுதாரித்துக்கொண்ட குணதிலகா ரன் எடுக்காமல் பின் வாங்கினார். அப்போது பந்தையும் அவர் காலில் தட்டிவிட்டு பின் சென்றதால் (Obstructing The Field) பொல்லார்டால் ரன் அவுட்டாக்க முடியாமல் போனது.

சர்ச்சை

சர்ச்சை

இதனால் கோபமடைந்த பொல்லார்ட் உடனடியாக களநடுவர் ஜோய் வில்சனிடம் முறையிட்டார். அவர் சாஃப்ட் சிக்னலில் அவுட் கொடுத்துவிட்டு 3வது நடுவரின் முடிவுக்கு பரிந்துரைத்தார். அப்போது வெஸ்ட் இண்டீஸுக்கு ஆதரவாக முடிவு வந்தது. பந்தை காலில் தட்டிவிட்டமைக்காக குணதிலகாவிற்கு அவுட் கொடுக்கப்பட்டது. இதற்கு ஒரு புறம் ஆதரவு வந்துகொண்டிருக்கும் நிலையில் மற்றொரு புறம் இந்த காரணத்திற்கு எல்லாம் அவுட் தருவதா எனக்கூறி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து பொல்லார்ட்டை திட்டி வருகின்றனர்.

Story first published: Thursday, March 11, 2021, 13:39 [IST]
Other articles published on Mar 11, 2021
English summary
Danushka Gunathilaka’s Dismissal Sparks Controversy in WI vs SL 1st ODI match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X