திடீரென ஃப்ளைட் ஏறாமல் போன கேப்டன்...குழம்பிய இலங்கை வீரர்கள்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்

வெஸ்ட் இண்டீஸ்: இலங்கை அணி கேப்டன் ஷனகா திடீரென விமானம் ஏற முடியாமல் போனதால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடருக்கு இலங்கை அணி கேப்டனாக ஷனகா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரால் விமானம் ஏறமுடியாமல் போயுள்ளது.

செம கோபம்.. ஒவ்வொரு பந்திலும் தோனிக்கு மெசேஜ் அனுப்பிய இளம் தமிழக வீரர்.. அதிர்ந்த மைதானம்!

இந்நிலையில் கேப்டன் இன்றி மேற்கு இந்திய தீவுகளுக்கு சென்றுள்ள வீரர்களுக்கு புதிய அறிவிப்பை ஒன்றை இலங்கை வாரியம் வெளியிட்டுள்ளது.

இலங்கை சுற்றுப்பயணம்

இலங்கை சுற்றுப்பயணம்

இலங்கை கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது. இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 3-ந்தேதி ஆன்டிகுவாவில் தொடங்குகிறது.

ஷனகா

ஷனகா

இலங்கை டி20 அணியின் கேப்டனாக லசித் மலிங்கா செயல்பட்டு வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் அணி பயிற்சி முகாமில் பங்கேற்காததால் டி20 அணியின் கேப்டனாக தசுன் ஷனகா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வெஸ்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு அவர் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

 கேப்டன் ஷனகா

கேப்டன் ஷனகா

2019ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணிக்கு தசுன் ஷனகா கேப்டனாக செயல்பட்டார். அதில் டி20 தொடரை 3 - 0 என வெற்றி பெற்றுக்கொடுத்தார். 25 வயதாகும் ஷனகா, இதுவரை 6 டெஸ்ட், 22 ஒரு நாள், மற்றும் 40 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.

மேத்தீவ்ஸ்

மேத்தீவ்ஸ்

வெஸ்ட் இண்டீஸுக்கு இலங்கை அணி விமானம் ஏறும் போது ஷனகா ஏறவில்லை. ஏனெனில் அவர் பாஸ்போர்ட் மற்றும் விசா வை தொலைத்து விட்டார். இதனால் அவசரமாக புதிய விசா ஏற்பாடு செய்ய முடியவில்லை. இதன் காரணமாக டி20 அணிக்கு மேத்தீவ்ஸ் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். விசா பிரச்னை தீர்ந்தவுடன் ஷனகா அணியில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
WI vs SL: Mathews to captain Srilanka in t20 as visa issues shanaka
Story first published: Sunday, February 28, 2021, 17:58 [IST]
Other articles published on Feb 28, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X