For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்தடுத்து புஜாரா, கில் அவுட்... துணை கேப்டனும் அவுட்... மீளுமா இந்தியா?

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது இன்னிங்சை இந்தியா தற்போது ஆடி வருகிறது.

நேற்றைய 4வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 39 ரன்களில் ரோகித் சர்மா விக்கெட்டை இழந்திருந்தது.

நம்பர் 1 மும்பையை வீழ்த்துமா நார்த் ஈஸ்ட் யுனைட்டெட்? பரபர மோதல்!நம்பர் 1 மும்பையை வீழ்த்துமா நார்த் ஈஸ்ட் யுனைட்டெட்? பரபர மோதல்!

இந்நிலையில் இன்றைய தினம் ஆடத்துவங்கிய புஜாரா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முறையே 15 மற்றும் 50 ரன்களில் ஆட்டமிழந்துள்ளனர். ரஹானே, பந்த், சுந்தரும் அவுட்டாகியுள்ளார்.

5வது நாள் ஆட்டம்

5வது நாள் ஆட்டம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா ஆடி வருகிறது. நேற்றைய தினம் தனது இரண்டாவது இன்னிங்சை ஆடத் துவங்கிய இந்திய அணி துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவின் விக்கெட்டை பறிகொடுத்து 39 ரன்களை எடுத்திருந்தது.

15 ரன்களில் புஜாரா அவுட்

15 ரன்களில் புஜாரா அவுட்

இந்நிலையில் இன்றைய 5வது நாள் ஆட்டத்தின் துவக்கத்தில் நிதானமாக பார்ட்னர்ஷிப்பில் ஆடிவந்த புஜாரா 15 ரன்களில் அவுட்டான நிலையில், தொடர்ந்து தன்னுடைய அரைசதத்தை பூர்த்தி செய்த சுப்மன் கில் 50 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். 420 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி ஆடி வருகிறது.

புஜாரா -பந்த் பார்ட்னர்ஷிப்

புஜாரா -பந்த் பார்ட்னர்ஷிப்

கடந்த போட்டியில் புஜாரா, பந்த்துடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் சிறப்பாக விளையாடி 73 ரன்களை குவித்த நிலையில், தற்போது 15 ரன்களில் ஆட்டழிந்துள்ளது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது. இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் நிலைத்தும் அதிரடியாகவும் ஆடினால் மட்டுமே வெற்றியை சுவைக்க முடியும்.

ரஹானே டக் அவுட்

ரஹானே டக் அவுட்

துணை கேப்டன் ரஹானே, பந்த், சுந்தரும் இன்றைய தினம் டக் அவுட் ஆகியுள்ளனர். தற்போது கேப்டன் விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆகியோர் களமிறங்கி விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து விளையாடினால் மட்டுமே இந்த போட்டியை டிரா ஆவது செய்ய முடியும் என்ற நிலையும் உள்ளது.

Story first published: Tuesday, February 9, 2021, 12:09 [IST]
Other articles published on Feb 9, 2021
English summary
James Anderson cleans up Gill and Rahane
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X