For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலி வாழ்க்கையில் என்ன நடந்தது..?? தோனி என்ன சொன்னார்..?? மனைவி அனுஷ்கா நெகிழ்ச்சி கடிதம்..

கேப் டவுன்: இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலிக்கு அவரது மனைவி அனுஷ்கா சர்மா கடிதம் ஒன்றை எழுதி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்

அதில் விராட் கோலி கேப்டனாக இருந்த 7 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை குறிப்பிட்டுள்ளார்

நாடு கடத்தப்படுகிறார் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்.. கடைசி முயற்சி தோல்வி.. ஆஸி.க்கு நுழைய 3 ஆண்டு தடை?நாடு கடத்தப்படுகிறார் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்.. கடைசி முயற்சி தோல்வி.. ஆஸி.க்கு நுழைய 3 ஆண்டு தடை?

அந்த கடிதத்தில் விராட் கோலி பல சவால்களை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனை தற்போது காணலாம்.

தோனி கிண்டல்

தோனி கிண்டல்

தோனி கேப்டன் பதவியை விட்டு விலகியதால், தாம் கேப்டனாக்கப் பட்டதாக கூறிய நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. நீ, நான், தோனி மூவரும் 2014ஆம் ஆண்டு அன்றைய தினம் பேசி சிரித்து கொண்டு இருந்தோம். அன்று உனது தாடியில் எவ்வளவு சீக்கிரம் நரை முடி வளர்கிறது என்று பார் என்று தோனி பேசி சிரித்து கொண்டு இருந்தார்

நல்ல எண்ணம்

நல்ல எண்ணம்

அதே போல் உனது தாடியில் நரை முடி தென்பட்டன.அதை நான் உன் அருகில் இருந்து கண்டேன்.அதுமட்டுமல்லாமல் நீ அடைந்த வளர்ச்சியும், உன்னால் அணி வளர்ந்ததையும் நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். இந்த 7 ஆண்டுகளில் இந்திய அணி பல வெற்றிகளை குவித்தது.2014ஆம் ஆண்டு நாம் ஒரு குழந்தையின் மனநிலையில் இருந்தோம். நல்ல எண்ணத்துடன் நீ கேப்டன் பொறுப்பை ஏற்றாய்.

சவால்கள்

சவால்கள்

ஆனால், களத்தில் மட்டுமல்லாமல், களத்திற்கு வெளியேவும் நீ பல சவால்களை சந்தித்தாய். சவால்கள் நிறைந்தது தானே வாழ்க்கை.எதிர்பாராத சூழ்நிலைகள் நம்மை மிகவும் சோதிக்கும்.ஆனால் உன் நல்ல மனதால் களத்தில் முழு சக்தியையும் வெளிப்படுத்தி வெற்றி கண்டாய். சில தோல்விகளில் கண்ணீருடன் இன்னும் என்ன செய்து இருக்கலாம் என்று யோசிப்பாய். அது தான் நீ. நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருப்பது தான் எனக்கும், மற்றவர்களுக்கும் பிடிக்கும்

அழுக்கற்ற நேர்மை

அழுக்கற்ற நேர்மை

இதனால் தான் என் கண்ணுக்கு நீ சிறந்தவனாக தெரிகிறாய். உன் கண்ணில் அழுக்கற்ற நேர்மையும், நல்ல எண்ணங்களும் இருக்கும்.நல்ல விசயத்திற்காக என்றும் நீ நின்றாய். போராடினாய். உனக்கு பேராசை கிடையாது. உன் காதல், என் காதல் அளவற்றது. உனது இந்த 7 ஆண்டு பயணம் நமது மகளுக்கு நல்ல பாடமாக இருக்கும். நீ சிறப்பாக நடந்து கொண்டாய் என்று அனுஷ்கா சர்மா தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

Story first published: Sunday, January 16, 2022, 19:07 [IST]
Other articles published on Jan 16, 2022
English summary
Wife Anushka sharma Writes heartfelt letter to her husband விராட் கோலி வாழ்க்கையில் என்ன நடந்தது..?? மனைவி அனுஷ்கா சர்மா நெகிழ்ச்சி கடிதம்..
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X