For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உங்களுக்கு தான் பைத்தியம்..! சிகிச்சைக்கு பாகிஸ்தான் வாங்க..! கம்பீரை மீண்டும் வம்பிழுத்த அப்ரிடி

இஸ்லாமாபாத்: நான் எதுக்கு இந்தியா வரணும்? மனநல சிகிச்சை எடுத்துக்கு நீங்க பாகிஸ்தான் வாங்க என்று கம்பீரை, முன்னாள் வீரர் அப்ரிடி வம்பிழுத்து உள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் ஷாகித் அப்ரிடி கடந்த ஏப்ரல் 25ம் தேதி தி கேம் சேஞ்சர் எனும் சுய சரிதையை வெளியிட்டார். அதில் முதன்முறையாக தனது உண்மையான பிறந்த நாளை குறிப்பிட்டுள்ளார். அப்ரிடியின் அந்த புத்தகம் பெருத்த சர்ச்சையை கிரிக்கெட் உலகில் உருவாக்கி இருக்கிறது.

எதிர்பாராத நேரத்தில் தனியொரு ஆளாக போட்டியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பேட்ஸ்மேனாக அப்ரிடி விளங்கினார். இதன் காரணமாகவே அவர் 'கேம் சேஞ்சர்' என அழைக்கப்பட்டார். அதுமட்டுமின்றி பவுலிங் போடும்பொழுது ரன் ஓடும் பேட்ஸ்மேன்களுக்கு இடைஞ்சல் கொடுப்பது, கிரிக்கெட் பந்தை கடிப்பது என அவரது பல்வேறு சர்ச்சைகளும் பிரபலம்.

VIDEO: அவரு ரன் எடுக்க போகணுமா? இல்ல பேட்ட எடுக்க போகணுமா? அடிச்ச அடியில் அந்தரத்தில் பறந்த பேட்! VIDEO: அவரு ரன் எடுக்க போகணுமா? இல்ல பேட்ட எடுக்க போகணுமா? அடிச்ச அடியில் அந்தரத்தில் பறந்த பேட்!

வயது சர்ச்சையில் அப்ரிடி

வயது சர்ச்சையில் அப்ரிடி

வயது சர்ச்சை மட்டுமின்றி அப்ரிடி தனது சுயசரிதையில் பல முக்கிய வீரர்கள் மற்றும் ஆளுமைகளை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், பாஜக லோக்சபா வேட்பாளரும், கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீரையும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அவரிடம் பேச்சு மட்டுமே உள்ளது, சாதனைகள் இல்லை, அவருக்கு மற்ற வீரர்களுடன் முறையாக நடந்து கொள்வதில் பிரச்சனை இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

கம்பீர் பதிலடி

கம்பீர் பதிலடி

அப்ரிடியின் விமர்சனத்திற்கு பதிலடி தந்துள்ள கவுதம் கம்பீர், அப்ரிடி ஒரு கோமாளி என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா இலவச வீசா அளித்து வருகிறோம். எனவே, இங்கு வந்து மனநல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று செல்லுங்கள் என்றும் கம்பீர் கூறியுள்ளார்.

அப்ரிடி பதிலடி

அவரது இந்த கருத்துக்கு தற்போது கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். அவரும் தமது டுவிட்டர் பதிவில் தான் பதில் கூறியிருக்கிறார். அப்ரிடி தெரிவித்திருப்பதாவது: கம்பீருக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்கு நிறைய மருத்துவமனைகள் தெரியும். இந்திய அரசானது அவ்வளவு எளிதாக பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்காது.

விசா தருகிறேன்

ஆனால் பாகிஸ்தான் மக்களும், பாகிஸ்தான் அரசும் இந்தியர்களை மகிழ்வுடன் வரவேற்கிறோம். அதனால் கம்பீருக்கு நான் விசாவிற்கு ஏற்பாடு செய்கிறேன். இங்கு வந்து நீங்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அப்ரிடி பதிலடி கொடுத்திருக்கிறார். கம்பீர் இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிடுவார் என்று சொல்லமுடியாது. அவரும் தக்க பதிலடியை கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Sunday, May 5, 2019, 13:31 [IST]
Other articles published on May 5, 2019
English summary
Will arrange Pakistan visa for treatment says Shahid Afridi to gambhir.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X