For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?

Recommended Video

உலக கோப்பையில் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?-வீடியோ

மும்பை : உலகக்கோப்பைக்கான இந்திய ஒருநாள் அணியில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இருவரில் இடம் பெறப் போவது யார்?

இந்த கேள்விக்கான விவாதம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. இது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். தேர்வுக் குழு தலைவர் பிரசாத்தும் இது பற்றி பேசியுள்ளார்.

அணியில் இடம்

அணியில் இடம்

இதற்கு காரணம், ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரிலும், அதன் பின் நடைபெற்ற நியூசிலாந்து ஒருநாள் தொடரிலும் ரிஷப் பண்ட் இடம் பெறவில்லை. தற்போது இந்தியாவில் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் தினேஷ் கார்த்திக் இடம் பெறவில்லை.

தினேஷ் வாய்ப்பு பெற மாட்டார்

தினேஷ் வாய்ப்பு பெற மாட்டார்

இப்படி இவர்கள் இருவரும் ஒருநாள் அணியில் இடத்தை மாற்றி மாற்றி இழந்து வருவது கடும் குழப்பத்தை உண்டாக்கி உள்ளது. உலகக்கோப்பைக்கு முன் நடக்கும் கடைசி ஒருநாள் தொடரில் தினேஷ் கார்த்திக் இடம் பெறாதது, அவர் உலகக்கோப்பையிலும் வாய்ப்பு பெற மாட்டார் என்ற தோற்றத்தை உண்டாக்கி உள்ளது.

தினேஷ் கார்த்திக் ஃபினிஷர்

தினேஷ் கார்த்திக் ஃபினிஷர்

தேர்வுக் குழு தலைவர் பிரசாத் கூறுகையில் தினேஷ் கார்த்திக் ஃபினிஷர் என்ற இடத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதே சமயம், ரிஷப் பண்ட்டின் வளர்ச்சி மிக வேகமாக உள்ளது. இருவரும் நன்றாக ஆடுகிறார்கள். ஆனால், அணிக்கு எது முக்கியம் என்பதே எங்கள் முடிவில் பிரதிபலிக்கும் என சூசகமாக கூறி உள்ளார்.

50 ஓவர் எதிர்காலம்

50 ஓவர் எதிர்காலம்

முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில் தினேஷ் கார்த்திக் நன்றாக ஆடினாலும், தற்போது அவர் இடத்தை இழந்துள்ளார். அவரை இந்திய அணி டி20 பேட்ஸ்மேன் என்ற அளவிலேயே பார்க்கிறது. என்னைப் பொறுத்தவரை அவரது 50 ஓவர் எதிர்காலம் முடிந்து விட்டது என கூறி உள்ளார்.

இருவருமே ஆடலாம்

இருவருமே ஆடலாம்

கவாஸ்கர் கூறுகையில், தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இருவருமே உலகக்கோப்பை அணியில் இடம் பெற வேண்டும் என கூறி உள்ளார். இருவருமே சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், இவர்களில் ஒருவரை நீக்குவது என்பது தேவையற்ற ஒன்று என்பது இவரது கருத்தாக உள்ளது.

இருவருக்கும் வாய்ப்புண்டா?

இருவருக்கும் வாய்ப்புண்டா?

தேர்வுக் குழு தலைவரை பொறுத்தவரை அணியின் சமநிலைக்கு சாதகமான வீரரே தேர்வு செய்யப்படுவார். அந்த நிலையில், கவாஸ்கர் சொல்வது போல இவர்கள் இருவரும் அணியில் இடம் பெற வாய்ப்புண்டா? இப்போதைக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.

ராகுல் என்ன செய்யப் போகிறார்?

ராகுல் என்ன செய்யப் போகிறார்?

அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் மூன்றாவது துவக்க வீரராக அணியில் ராகுல் பரிசோதனைக்கு உள்ளாக இருக்கிறார். ஒருவேளை அவர் இந்த வாய்ப்பிலும் சொதப்பினால், ரிஷப் பண்ட் மாற்று துவக்க வீரர் இடத்தை பிடிக்கலாம்.

தினேஷ் கார்த்திக் அனுபவம்

தினேஷ் கார்த்திக் அனுபவம்

அப்படி நடந்தால், தினேஷ் கார்த்திக்கும் உலகக்கோப்பை அணியில் இடம் பெறலாம். அனுபவ அடிப்படையில் பார்த்தால், தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பெற்றே தீர வேண்டும். அவர் பொறுப்பாக ஆடக் கூடியவர்.

Story first published: Monday, February 18, 2019, 19:47 [IST]
Other articles published on Feb 18, 2019
English summary
Will Dinesh Karthik and Risahbh pant both get chance in world cup 2019?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X