For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோப்பை முக்கியம் நண்பா... சாதனை பட்டியல அப்புறமா பாத்துக்கலாம்...

ராஜ்காட் : ரஞ்சிக் கோப்பையின் இறுதிப்போட்டியில் விளையாடிவரும் சௌராஷ்டிர அணியின் கேப்டன் ஜெய்தேவ் உனாத்கட், ரஞ்சிக் கோப்பையை வெல்வது மட்டுமே தற்போதைய இலக்கு என்ற தெரிவித்துள்ளார்.

Recommended Video

Ranji Trophy Finals 2020 | Ananthapadmanabhan played umpire roles from both end

86வது ரஞ்சிக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ராஜ்காட்டில் சௌராஷ்டிர மற்றும் பெங்கால் அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகிறது. இதில் சௌராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

Will give my all for the Ranji Trophy title: Jaydev Unadkat

இதனிடையே, அரையிறுதிப்போட்டியில் 3.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னுடைய அணியின் வெற்றிக்கு காரணமான சௌராஷ்டிரா அணியின் கேப்டன் ஜெய்தேவ் உனாத்கட், தற்போது சாதனைகளை திரும்பிப் பார்க்க நேரமில்லை என்று தெரிவித்துள்ளார்.

86வது ரஞ்சி கோப்பை தொடர் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. சௌராஷ்டிரா மற்றும் பெங்கால் அணிகள் இறுதிப்போட்டியை ராஜ்காட்டில் விளையாடி வருகின்றன. முதலில் களமிறங்கிய சௌராஷ்டிர அணி, முதல் நாளில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை குவித்துள்ளது. இரண்டாவது நாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குஜராத்திற்கு எதிராக சௌராஷ்டிரா மோதிய அரையிறுதிப்போட்டியில் அணியின் கேப்டன் ஜெய்தேவ் உனாத்கட், 3.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னுடைய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். ஆனால் இதுகுறித்தெல்லாம் பெருமை கொள்ள நேரமில்லை என்றும், ரஞ்சிக் கோப்பையை வெல்வதே தற்போதைய ஒரே இலக்கு என்றும் ஜெய்தேவ் கூறியுள்ளார்.

இறுதிப்போட்டியின் முதல் நாளில் விளையாடிய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது தன்னுடைய கனவுத் தொடர் என்றும், தான் எடுத்துள்ள விக்கெட்டுகள் மிகந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் முன்னதாக இதுபோன்ற மகிழ்ச்சி தனக்கு ஏற்பட்டதில்லை என்றும் கூறியுள்ளார். தான் சில சாதனைகளை புரிந்துள்ள போதிலும், சௌராஷ்டிரா அணி இதுவரை வெற்றி கொள்ளாத ரஞ்சிக் கோப்பையை வெல்வதே தற்போதைய தன்னுடைய ஒரே சிந்தனை என்று கூறினார். அதற்காக தான் எந்த விலையையும் கொடுக்க தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் தற்போது சத்தீஸ்வர் புஜாரா இணைந்துள்ளது, அணிக்கு வலிமையை மேலும் சேர்த்துள்ளது. முதல் நாளில் புஜாரா காய்ச்சல் காரணமாக 24 பந்துகளில் வெளியேறிய நிலையில், இன்று அவர் விளையாடுவார் என்றும் ஜெய்தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தன்னுடைய நண்பர் புஜாரா, சௌராஷ்டிரா அணிக்கு தூண் போன்றவர் என்று குறிப்பிட்ட ஜெய்தேவ், சொந்த மாநில மைதானத்தில் ரஞ்சி கோப்பையின் இறுதிப்போட்டியை விளையாடுவது மிகச்சிறந்த அனுபவம் என்றும் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, March 10, 2020, 15:10 [IST]
Other articles published on Mar 10, 2020
English summary
It has been a dream season for me -Says Jaydev Unadkat
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X