Exclusive: 2020 சீசன்.. 'ஜெராக்ஸ்' எடுக்கிறதா 2021 ஐபிஎல்? யுஏஇ 'செண்டிமெண்ட்' கைக்கொடுக்குமா?

டெல்லி: ஐபிஎல் 2021 தொடரின் போட்டிகள் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருக்கும் சூழலில், மீண்டும் எப்போது தொடங்க வாய்ப்புள்ளது என்பது குறித்து நமக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன.

கொரோனா எனும் கொடிய நேரத்தில், ரசிகர்களுக்கும் சரி, வேதனையில் இருக்கும் மக்களுக்கும் சரி, ஓரளவுக்கு ஆறுதலாக இருந்தது ஐபிஎல் கிரிக்கெட் தொடர். மாலை நேரத்தில் வீட்டை விட்டு பலர் வெளியே செல்வதைத் தடுக்கும் மிக முக்கியமான வேலையை இந்த ஐபிஎல் 2021 தொடர் தவறாமல் செய்து வந்தது.

பெரிய டீம்ன்னா பயப்படணுமா?.. ரசிகர்கள் வெறுத்துடுவாங்க - பாக்., அணியை வெளுக்கும் சீனியர்ஸ்

ஆனால், இந்தியாவில் கொரோனா 2வது அலை கட்டுக்கடங்காமல் செல்ல, ஐபிஎல் வீரர் வருண் சக்கரவர்த்தி மூலம் பயோ-பபுலை உடைத்து கோவிட் தனது வீரியத்தை காட்ட, அலறி போய் தொடரையே சஸ்பெண்ட் செய்துவிட்டது பிசிசிஐ.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

இந்த நிலையில், மீதமிருக்கும் போட்டிகள் மீண்டும் எப்போது தொடங்கும்? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இப்போதுள்ள நிலையில், தலைகீழாக நின்றாலும் இந்தியாவில் தொடரை நடத்த வாய்ப்பில்லை. இதனை பிசிசிஐ தலைவர் கங்குலியும் ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்துவிட்டார். ஆகையால் அடுத்த நான்கைந்து மாதங்களுக்கு இந்தியாவில் தொடரை நடத்த முடியாது என்பது உறுதியாகிறது.

இந்த நிமிடம் வரை

இந்த நிமிடம் வரை

இதுகுறித்து, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வர்ணனையாளர் பிரதீப் முத்துவிடம் நமது myKhel தளம் சார்பாக பேசினோம். அவர், "மற்ற கிரிக்கெட் வாரியங்களுடன், இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடக்கிறது. ஆனால், இந்த நிமிடம் வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. பட், கூடிய விரைவில், வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு, போட்டி நடத்தப்படும் இடம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம்" என்று முடித்துக் கொண்டார்.

ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகம்

அதேசமயம், நாம் மேலும் சில கிரிக்கெட் ஆர்வலர்களிடம் பேசுகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடத்தவே அதிகம் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக, வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடத்தப்படவிருந்த நிலையில், கொரோனா பரவல் மற்றும் அச்சம் காரணமாக, வேறு நாட்டுக்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

அப்படியே ஐபிஎல்

அப்படியே ஐபிஎல்

அந்த வேறு நாடு ஆப்ஷனாக இருப்பது ஐக்கிய அரபு அமீரகம் தானாம். ஸோ, உலகக் கோப்பை தொடரை அங்கு ஷிஃப்ட் செய்து முடித்துவிட்டு, அங்கேயே ஐபிஎல் போட்டிகளையும் நடத்தவே அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில், இதே அக்டோபர், நவம்பர் காலக்கட்டத்தில் தான் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டது. இந்தாண்டும் மீண்டும் அதே போன்றே நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ipl 2021 remaining matches after t20 world cup - ஐபிஎல் 2021
Story first published: Tuesday, May 11, 2021, 11:37 [IST]
Other articles published on May 11, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X