For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"இன்ஸி" ரெக்கார்டுக்கு வருது ஆபத்து.. விரட்டியடிக்க தயாராகிறார் கோலி!

ஹைதராபாத்: இந்திய கேப்டன் விராத் கோலி புதிய சாதனைக்குத் தயாராகி வருகிறார். வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் தொடங்கவுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின்போது இந்த சாதனையை கோலி படைக்கவுள்ளார்.

விராத் கோலி தற்போது டெஸ்ட் போட்டிகளில் 25 சதங்கள் விளாசியுள்ளார். அவரை விட அதிக சதங்கள் எடுத்தோர் வரிசையில் கோலிக்கு முன்பு உள்ளவர் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக். அவர் 25 சதங்களை வைத்துள்ளார்.

இந்த சாதனையை சமன் செய்ய அல்லது முந்திச் செல்லும் வாய்ப்பு விராத் கோலிக்கு கிடைத்துள்ளது. ஹைதராபாத்தில் இந்த இரண்டையும் அவர் செய்வாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். செய்யக் கூடிய வல்லமை படைத்தவர் கோலி என்பதால் இந்த எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

29 - 72

29 - 72

29 வயதாகும் கோலி இதுவரை 72 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 54.66 பேட்டிங் சராசரியுடன் 6286 ரன்களை குவித்துள்ளார். அதேசமயம், இன்ஸமாம் உல் ஹக் 120 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8830 ரன்களே எடுத்துள்ளார். அவரது சராசரியும் கம்மிதான் அதாவது 49.60.

21வது இடத்தில் கோலி

21வது இடத்தில் கோலி

24 டெஸ்ட் சதங்களுடன் சத சாதனையாளர்கள் வரிசையில் 21வது இடத்தில் இருக்கிறார் கோலி. முதலிடத்தில் இருப்பவர் யார் தெரியுமா.. வேற யாரு நம்ம கடவுள்தான். மொத்தம் 51 சதங்களுடன் சச்சின் முதலிடத்தை விட்டு அகலாமல் அப்படியே இருக்கிறார். டெண்டுல்கரின் மொத்த டெஸ்ட் ரன்கள் 15,921 ஆகும். 20 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். சராசரி 53.78.

இதில் நம்பர் 2

இதில் நம்பர் 2

ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர்கள் வரிசையில் 2வது இடத்தில் இருக்கிறார் கோலி. அதாவது 35 சதங்கள் விளாசியுள்ளார். சச்சின் தான் இங்கும் நம்பர் 1. மொத்தம் 49 சதம் எடுத்துள்ளார் சச்சின்.

டம்மி டீம்

டம்மி டீம்

தற்போது இந்தியாவுக்கு வந்துள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி சொதப்பலாக உள்ளது. சொத்தை அணியான இந்த அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸ் 272 ரன்கள் வித்தியாச வெற்றியுடன் இந்தியா முடித்தது. புதுமுக வீரர் பிருத்வி ஷா அபார சதம் போட்டார். ஜடேஜாவும் சதமடித்தார். கோலியும் ஒரு சதம் போட்டார்.

பார்க்கலாம் இன்ஸமாம் சாதனையை கோலி முறியடிப்பாரா அல்லது சமன் செய்வாரா என்பதை.

Story first published: Friday, April 17, 2020, 21:29 [IST]
Other articles published on Apr 17, 2020
English summary
Fans are eagerly waiting to see Indian captain Virat Kohli to surpass Pakistan legend Inzamam-ul-Haq's Record In Hyderabad during the 2nd test match against West indies.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X