For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அபாரமாக வென்றது மும்பை... பிளே ஆப் வாய்ப்பை சிக்கலாக்கி கொண்ட பஞ்சாப்!

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது யார் என்பதை முடிவு செய்யும் ஆட்டத்தில் பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன.

மும்பை: ஐபிஎல்லில் இன்று நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வென்றது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறிய மும்பை பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்தது. அதை நேரத்தில் வலுவாக இருந்த பஞ்சாப் தனது வாய்ப்பை சிக்கலாக்கி கொண்டது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் மிகவும் பரபரப்பாகவும் அதே நேரத்தில் மிகவும் குழப்பாகவும் அமைந்துள்ளது. விடையில்லாத விடுகதைபோல, மிகப் பெரிய இடியாப்ப சிக்கலாக சீசன் சென்று கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் எந்த ஆட்டத்தின் முடிவு யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது புதிராக இருப்பதால் ஆட்டங்களில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

மொத்தம் 8 அணிகள் விளையாடும் இந்த சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 12 ஆட்டங்களில் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 12 ஆட்டங்களில் 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

இந்த இரண்டு அணிகள் மட்டுமே இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. டெல்ல் டேர்டெவில்ஸ் அணிக்கு மட்டுமே பிளே ஆப் சுற்று வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

யார் எந்த இடத்தில் உள்ளனர்

யார் எந்த இடத்தில் உள்ளனர்

13 ஆட்ங்களில் 14 புள்ளிகளுடன் கொல்கத்தா உள்ளது. ராஜஸ்தான் ராயல் 13 ஆட்டங்களில் 12 புள்ளுகளைப் பெற்றுள்ளது. பஞ்சாப் 12 ஆட்டங்களில் 12 புள்ளிகளை பெற்றுள்ளது. மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் 12 ஆட்டங்களில் 10 புள்ளிகளுடன் உள்ளன.

5 அணிகளுக்கும் வாய்ப்பு

5 அணிகளுக்கும் வாய்ப்பு

தற்போதைய நிலையில் இந்த ஐந்து அணிகளுக்குமே பிளே ஆப் சுற்று முன்னேறும் வாய்ப்பு உள்ளது. அடுத்தடுத்த நடக்கும் ஆட்டங்களின் முடிவைப் பொருத்தே யார் முன்னேறுவர் என்பது தெரியும் அளவுக்கு புள்ளி விபரங்கள் குழப்பத்தில் உள்ளன.

நிலைமை மாறியது

நிலைமை மாறியது

சீசனின் துவக்கத்தில் அதிரடியாக வெற்றிகளை குவித்து வந்தது பஞ்சாப் அணி. ஆனால் பின்னர் நிலைமை மாறியது. கடைசியாக மூன்று ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது. அதேநேரத்தில், சீசனின் துவக்கத்தில் படு தோல்விகளை சந்தித்தது நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்,. கடைசி கட்டத்தில் வெற்றிகளை குவித்து வருகிறது.

பஞ்சாபுக்கு சிக்கல்

பஞ்சாபுக்கு சிக்கல்

மும்பையில் நடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. பொலார்டு அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். பஞ்சாபின் ஆன்ட்ரூ டை 4 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் ஆடிய பஞ்சாப் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. லோகேஷ் கடுமையாக போராடி 94 ரன்கள் எடுத்தார். மும்பையின் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்துக்கு மும்பை முன்னேறியது. தனது வாய்ப்பை பஞ்சாப் சிக்கலாக்கி கொண்டது.

Story first published: Thursday, May 17, 2018, 0:23 [IST]
Other articles published on May 17, 2018
English summary
KXIP and MI to play today in the IPL. Will punjab overcome the defeats.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X