வீனஸ் போட்ட 'ராக்கெட் சர்வீஸ்'.. ஆனால் சாதனை இல்லை என்று நிராகரிப்பு!

By Sutha

டோக்கியோ: டோக்கியோவில் நடந்து வரும் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ள வீனஸ் வில்லியம்ஸ், அதி வேகமாக சர்வீஸ் போட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஆனால் அது சரியான முறையில் கணக்கிடப்படவில்லை என்பதால் அதை உலக சாதனையாக ஏற்க முடியாது என்று டென்னிஸ் அமைப்பு கூறி விட்டது.

மகளிர் டென்னிஸ் உலகின் அசைக்க முடியாத ராணியாக வலம் வரும் செரீனாவின் அக்காள்தான் வீனஸ். இவரும் முன்னணி வீராங்கனைதான்.

டோக்கியோவில் நடந்து வரும் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளார் வீனஸ். காலிறுதிப் போட்டியில் கனடாவின் ஈஜின் போச்சார்டுடன் அவர் மோதி வென்றார். இந்தப் போட்டியில் அவர் போட்ட ஒரு சர்வீஸ் அதி வேகமாக இருந்தது.

ராக்கெட் சர்வீஸ்

ராக்கெட் சர்வீஸ்

ராக்கெட் சர்வீஸ் என்று இதனை வர்ணிக்கின்றனர் டென்னிஸ் ரசிகர்கள். புல்லட் போல படு வேகமாக போட்டார் இந்த சர்வீஸை வீனஸ்.

மணிக்கு 209 கிலோமீட்டர் வேகம்

மணிக்கு 209 கிலோமீட்டர் வேகம்

இந்த சர்வீஸ் மணிக்கு 209 கிலோமீட்டர் என்ற வேகத்தில் அதிரடியாக இருந்தது.

ஆனால் உலக சாதனை இல்லை

ஆனால் உலக சாதனை இல்லை

இந்த ராக்கெட் சர்வீஸ், உலகின் அதி வேக சர்வீஸாகவும் கருதப்பட்டது. ஆனால் அதை மகளிர் டென்னிஸ் சங்க நிர்வாகிகள் சாதனையாக அங்கீகரிக்க மறுத்து விட்டனர்.

உரிய முறையில் கணக்கிடவில்லை

உரிய முறையில் கணக்கிடவில்லை

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், டோக்கியோ தொடரில் சர்வீஸ்களின் வேகத்தைக் கணக்கிடும் உரிய கருவி வைக்கப்படவில்லை. அங்கிருந்தவை நம்பகத்தன்மை இல்லாதவை. எனவே இந்த சர்வீஸின் கணக்கை வைத்து அதி வேக சர்வீஸ் என்ற முடிவுக்கு வருவது கடினம். எனவே வீனஸின் சர்வீஸ் வேகம் சாதனையாக கருதப்பட முடியாது என்று கூறி விட்டனர்.

33 வயதில் புத்துணர்ச்சியுடன் ஆட்டம்

33 வயதில் புத்துணர்ச்சியுடன் ஆட்டம்

வீனஸுக்கு தற்போது 33 வயதாகிறது. இடையில் சரியான பார்மில் அவர் இல்லை. இந்தத் தொடரில் அவர் தொடக்கம் முதலே விறுவிறுப்புடன் ஆடி வருகிறார். அதன் பிரதிபலிப்பே இந்த அதி வேக சர்வீஸ்.

ஆனாலும் சாதனைக்காரிதான்

ஆனாலும் சாதனைக்காரிதான்

இருப்பினும் வீனஸ் ஏற்கனவே சர்வீஸில் உலக சாதனை படைத்தவர்தான். 2007 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் மணிக்கு 207.6 கிலோமீட்டர் என்ற வேகத்தில் சர்வீஸ் போட்டு சாதனை படைத்தவர் ஆவார். அதேபோல 2008ம் ஆண்டிலும் இதே வேகத்தில் சர்வீஸ் போட்டுள்ளார்.

63வது இடத்தில்

63வது இடத்தில்

தற்போது 63வது தரவரிசையில் இருக்கும் வீனஸ், 7 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர் ஆவார். ஆனால் காயம், உடல் சுகவீனம் போன்றவற்றால் அவரது டென்னிஸ் வாழ்க்கை பெரும் சரிவுக்குப் போய் விட்டது.

நானா போட்டேன்...

நானா போட்டேன்...

டோக்கியோ போட்டியில் அதி வேகமாக சர்வீஸ் போட்டது குறித்து வீனஸ் கூறுகையில், நான் வேகமாக சர்வீஸ் போடுவதாக உணர்ந்தேன். ஆனால் இந்த வேகத்தில் அது இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னாலேயே நம்ப முடியவில்லை. நான் மீண்டும் நல்ல பார்மில் இருப்பதாகவும் உணர்கிறேன் என்றார் அவர்.

எங்கே ஓய்வு பெறுவது...

எங்கே ஓய்வு பெறுவது...

ஓய்வு குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் நான் நினைத்தால் கூட செரீனா விட மாட்டாள். நல்ல ஆரோக்கியத்துடனும், உடல் பலத்துடனும் இருக்கும் வரை ஆட வேண்டியதுதான் என்றார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
Venus Williams was denied a new record for the world's fastest serve Friday after tennis chiefs said a bullet delivery clocked at 209 kilometres (129.9 miles) per hour was not measured by the right equipment. The resurgent American star, 33, hit the rocket serve during Thursday's 6-3, 6-7 (4-7), 6-3 quarter-final win over Canadian teenager Eugenie Bouchard at the Pan Pacific Open.
Story first published: Friday, September 27, 2013, 15:42 [IST]
Other articles published on Sep 27, 2013
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more