For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வந்தாச்சு ஐசிசி ரேங்க்.. கோலி பாருங்க.. வில்லியம்சன் கிட்ட வந்துட்டாரு .. லேதமும் முன்னேற்றம்

துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, டெஸ்ட் அணிகளுக்கு இன்று வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், முதலிடத்தில் இருக்கும் கோலியை நெருங்கி உள்ளார்.

ஐசிசி அமைப்பானது டெஸ்ட் தர வரிசை பேட்ஸ்மென்களில் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக 915 புள்ளிகள் பெற்று அவரை நெருங்கி உள்ளார் வில்லியம்சன்.

நியூசிலாந்து விக்கெட் கீப்பர் டாம் லேதம், நீல் வாக்னர் ஆகியோரும் தர வரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 ஆரம்பமே சரியில்ல.. இங்கிலாந்துக்கு எதிரான முதல் T20 போட்டி.. மண்ணை கவ்விய மகளிர் இந்தியா ஆரம்பமே சரியில்ல.. இங்கிலாந்துக்கு எதிரான முதல் T20 போட்டி.. மண்ணை கவ்விய மகளிர் இந்தியா

வில்லியம்சன் இரட்டை சதம்

வில்லியம்சன் இரட்டை சதம்

அந்த ஆட்டத்தில் கேப்டன் வில்லியம்சன் இரட்டை சதம் அடித்தது நினைவிருக்கலாம். லேதமும் சதம் அடித்தார். இதனால், இருவரும் தர வரிசையில் குறிப்பிடத்தகுந்த உயர்வு பெற்றுள்ளனர்.

915 புள்ளிகள் பெற்றார்

915 புள்ளிகள் பெற்றார்

இந்த டெஸ்ட் போட்டி தொடங்கும் முன் பேட்ஸ்மேன் தரவரிசையில் 897 புள்ளிகளுடன் கேன் வில்லியம்சன் இருந்தார். ஆனால், இரட்டை சதம் அடித்த பின், 915 புள்ளிகள் பெற்றார். ஆனாலும், அவரால் கோலியை தொடமுடிய வில்லை. தொடர்ந்து 2வது இடத்திலேயே நீடிக்கிறார்.

முதலிடம் பெறலாம்

முதலிடம் பெறலாம்

வங்கதேசத்துடன் இன்னும் டெஸ்ட் போட்டிகள் பாக்கி உள்ளதால், கோலியின் முதலிடத்தைப் பிடிக்க வில்லியம்சனுக்கு வாய்ப்புகள் இருக்கின்றன. முன்னதாக நியூசிலாந்து தரப்பில் முன்னாள் வேகப்பந்துவீ்ச்சாளர் ரிச்சார்ட் ஹேட்லி 909 புள்ளிகள் பெற்றிருந்ததே உயர்வானதாகும். அதையும் இப்போது வில்லியம்சன் முறியடித்துள்ளார்.

பேட்ஸ்மேன் வரிசை

பேட்ஸ்மேன் வரிசை

பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் 10 இடங்களில் முறையே கோலி, வில்லியம்சன், புஜாரா, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், வார்னர், நிகோலஸ், மார்க்ரம், டீ காக், டூபிளசிஸ் ஆகியோர் உள்ளனர்.

போல்ட்டுக்கு சரிவு

போல்ட்டுக்கு சரிவு

பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார். நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட் 2 இடங்கள் சரிந்து, 769 புள்ளிகளுடன் 8வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஜடேஜா மாற்றமின்றி 5வது இடத்தில் உள்ளார்.

வாக்னர் முன்னேற்றம்

வாக்னர் முன்னேற்றம்

டிம் சவுதி 766 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளார். அதேசமயம், நீல் வாக்னர் 3 இடங்கள் முன்னேறி, 745 புள்ளிகளுடன் 11-து இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

சர்க்கார் உயர்வு

சர்க்கார் உயர்வு

வங்கதேசம் அணியில் இடதுகை தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 11 இடங்கள் உயர்ந்து, 25வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மகமதுல்லா 12 இடங்கள் முன்னேறி 40-வது இடத்திலும் சவுமியா சர்க்கார் 67வது இடத்துக்கும் உயர்ந்தனர்.

Story first published: Monday, March 4, 2019, 16:53 [IST]
Other articles published on Mar 4, 2019
English summary
Kane Williamson reaches career-best of 915 rating points after New Zealand's win over Bangladesh; Neil Wagner and Tom Latham also climb up the rankings.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X