For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புஜாரா இரட்டை சதம் அடிக்கணும்... இந்தியா வெற்றி பெறணும்... எதிர்பார்ப்பை வெளியிட்ட அமித் ஷா!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக அகமதாபாத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து இங்கிலாந்து அணி தற்போது ஆடி வருகிறது.

முன்னதாக மைதானத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜூ ஆகியோர் பங்கேற்றனர்.

இங்கிலாந்து அணி பேட்டிங்

இங்கிலாந்து அணி பேட்டிங்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட்டாக தற்போது அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

அமித் ஷா விருப்பம்

அமித் ஷா விருப்பம்

இன்றைய தினம் மைதானத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் கிரண் ரிஜிஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, சத்தீஸ்வர் புஜாரா இந்த 3வது போட்டியில் இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

புஜாரா உதவ வேண்டும்

புஜாரா உதவ வேண்டும்

முன்னதாக இந்த மைதானத்தில் ஜவகல் ஸ்ரீநாத், கபில்தேவ், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் மேற்கொண்ட சாதனைகளை சுட்டிக் காட்டிய அமித் ஷா, புஜாராவும் இரட்டை சதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சுட்டிக் காட்டிய அமித்ஷா

சுட்டிக் காட்டிய அமித்ஷா

அகமதாபாத்தில் கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் புஜாரா இரட்டை சதம் அடித்திருந்தார். அதை சுட்டிக் காட்டியே தற்போது அவர் அதே சாதனையை மேற்கொள்ள வேண்டும் என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். நிகழ்ச்சியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, துணை செயலாளர் அருண் துமால் துணை தலைவர் ராஜிவ் சுக்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Story first published: Wednesday, February 24, 2021, 21:02 [IST]
Other articles published on Feb 24, 2021
English summary
Amith Shah wishes to see Pujara score double century
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X