For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வந்தீங்களா வழிக்கு.. 2021 மகளிர் உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளுக்கு.. ரிசர்வ் நாள் உண்டாம்!

ஆக்லாந்து: ஒரு வழியாக மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கு ரிசர்வ் நாட்களை அறிவித்துள்ளது ஐசிசி. அதாவது 2021ல் நியூசிலாந்தில் நடைபெறும் மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டியின் நாக் அவுட் போட்டிகளுக்கு ரிசர்வ் நாட்களை ஐசிசி அறிவித்துள்ளது.

Recommended Video

இந்திய மகளிர் அணிக்கு கோலி அட்வைஸ்!

சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் டி 20 உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டிகளுக்கு ரிசர்வ் நாட்கள் அறிவிக்கப்படவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து தற்போது ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் நாக் அவுட் போட்டிகளுக்கு ரிசர்வ் நாட்களை அறிவித்துள்ளது ஐசிசி. இதற்கான முடிவு ஐசிசியின் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

 இளம் வீரர்களின் அசுர வளர்ச்சி.. சிறப்பான ஐஎஸ்எல் சீசனுக்கு காரணம் அவங்க தான்! இளம் வீரர்களின் அசுர வளர்ச்சி.. சிறப்பான ஐஎஸ்எல் சீசனுக்கு காரணம் அவங்க தான்!

மொத்தம் 31 போட்டிகள் தொடர்

மொத்தம் 31 போட்டிகள் தொடர்

மொத்தம் 31 போட்டிகளைக் கொண்டதாக இந்த உலகக் கோப்பைப் போட்டித் தொடர் இருக்கும். நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து, ஹாமில்டன், தராங்கா, வெல்லிங்டன், கிறிஸ்ட்சர்ச், டுனிடின் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறும். இதில் மொத்தம் 3 நாக் அவுட் போட்டிகள் இடம் பெறவுள்ளன. அதாவது இரண்டு அரை இறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி.

நாக் அவுட் போட்டிகளுக்கு ரிசர்வ் டே

நாக் அவுட் போட்டிகளுக்கு ரிசர்வ் டே

3 நாக் அவுட் போட்டிகளுக்கும் ரிசர்வ் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே மழை உள்ளிட்ட காரணங்களால் போட்டிகள் பாதிக்கப்பட்டால் அடுத்த நாள் போட்டிகள் தொடரும். கடந்த டி20 மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான அரை இறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டதால் இந்த முடிவுக்கு வந்துள்ளது ஐசிசி.

6 நகரங்களில் போட்டிகள்

6 நகரங்களில் போட்டிகள்

நியூசிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டித் தொடரின் இரு அரை இறுதிப் போட்டிகளும் முறையே மார்ச் 3 மற்றும் மார்ச் 4 ஆகிய தேதிகளில் முறையே தராங்கா மற்றும் ஹாமில்டனில் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டி மார்ச் 7ம் தேதி பகல் -இரவுப் போட்டியாக ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறும்.

நியூசிலாந்துடன் குவாலிபயர் அணி மோதல்

நியூசிலாந்துடன் குவாலிபயர் அணி மோதல்

பிப்ரவரி 6ம் தேதி தொடக்கப் போட்டி நடைபெறும். அப்போட்டியில் நியூசிலாந்து அணியும், குவாலிபயரில் வெற்றி பெறும் அணியும் மோதவுள்ளன. ஈடன் பார்க் மைதானத்தில் இப்போட்டி நடைபெறும். இதுவரை உலக கோப்பைப் போட்டித் தொடருக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் மட்டுமே உறுதியாகியுள்ளன.

இந்தியா தகுதி பெறுமா?

இந்தியா தகுதி பெறுமா?

இன்னும் 4 அணிகள் பங்கேற்க வேண்டியுள்ளது. இந்த அணிகளை ஜூலையில் நடைபெறும் குவாலிபயர் போட்டித் தொடர் மற்றும் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தேர்வு செய்யவுள்ளனர். இந்தப் போட்டித் தொடரின் மொத்த பரிசுத் தொகை 5.5 மில்லியன் நியூசிலாந்து டாலராகும். அனைத்துப் போட்டிகளும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன.

Story first published: Wednesday, March 11, 2020, 16:03 [IST]
Other articles published on Mar 11, 2020
English summary
Women's ODI World Cup 2021 Knockout Matches will have Reserve Days as per the decision of ICC
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X