For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு... மே.இந்திய தீவுகள் பேட்டிங்

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

By Devarajan

டான்டன்: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவும் மேற்கு இந்திய தீவுகளும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் மேற்கு இந்திய தீவுகள் அணியில் கிஷோனா நைட்டுக்கு பதிலாக ஷகேரா செல்மான் இடம்பெற்றுள்ளார்.

 Women's World Cup: India opt to field against West Indies

பேட்டிங்கைப் போலவே பந்து வீச்சு துறையிலும் இந்திய அணி சிறப்பாக உள்ளது. மகளிர் கிரிக் கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ள ஜுலன் கோஸ்வாமி தலைமை யில் இந்திய பந்து வீச்சாளர்கள் மேற்கிந்தியத் தீவுக்கு சவால் விடுவார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தியா: மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் கவுர், மந்தனா, வேதா கிருஷ்ணமூர்த்தி, மோனா மேஷ்ராம், பூனம் ராவத், தீப்தி சர்மா, ஜுலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, ஏக்தா பிஷ்ட், சுஷ்மா வர்மா, மன்சி ஜோஷி, ராஜேஸ்வரி கெய்க்வாட், பூனம் யாதவ், நுசாட் பர்வீன்.

மேற்கிந்திய தீவுகள்: ஸ்டபைன் டெய்லர், மரிஸ்ஸா, ரெனிஸ் பாய்ஸ், ஷமிலா கோனல், ஷானெல் டாலே, டாட்டின், அபி பிளெட்சர், கியானா ஜோசப், கிஷோனா நைட், ஹைலே மேத்யூஸ், அனிசா மொஹமட், சேடியன் நேஷன், அகிரா பீட்டர்ஸ், ஷகேரா செல்மான், பெலிஷியா வால்டர்ஸ்.

Story first published: Thursday, June 29, 2017, 17:32 [IST]
Other articles published on Jun 29, 2017
English summary
India won the toss and opted to field against West Indies in their ICC Women's World Cup match here today
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X