For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சொல்லவே இல்லை! விரைவில் மினி மகளிர் ஐபிஎல் தொடர் வருது.. ஆனா ஒரு சின்ன சிக்கல் இருக்கு!

மும்பை : இந்தியன் பிரீமியர் லீக் 2019 தொடருக்கு இடையே சிறிய அளவில் மகளிர் டி20 தொடர் நடத்தப்பட உள்ளதாக பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் 2019 தொடர் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு இடையே நடைபெற உள்ளது. அதனால், ஐபிஎல் தொடர் தேதிகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் எப்போது?

தேர்தல் எப்போது?

ஐபிஎல் 2019இன் போது மகளிர் டி20 தொடர் நடத்தப்படும் என முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் தேதிகள் வரும் வரை இது பற்றி முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஐபிஎல் போட்டி

கடந்த ஐபிஎல் போட்டி

கடந்த 2018 ஐபிஎல் தொடரின் போது பரிசோதனை முயற்சியாக ஒரே ஒரு மகளிர் டி20 போட்டி மட்டுமே நடத்தப்பட்டது. அந்த போட்டி பிளே-ஆஃப் போட்டிக்கு முன் மதியம் 2 மணிக்கு நடத்தப்பட்டது.

ரசிகர்களை ஈர்க்கவில்லை

ரசிகர்களை ஈர்க்கவில்லை

மதியம் நடத்தப்பட்டதால் அந்த போட்டி பெரிய அளவுக்கு ரசிகர்களை சென்று சேரவில்லை. எனவே, இந்த முறை ஒரு போட்டியோடு நின்று விடாமல் இரண்டு அணிகளை மூன்று போட்டிகள் கொண்ட தொடராக ஆடுவது அல்லது மூன்று அணிகள் ரவுண்ட் ராபின் முறையில் ஆடுவது என திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர் வடிவம்

தொடர் வடிவம்

தேர்தல் காரணமாக தேதிகள் முடிவு செய்வதில் உள்ள தாமதம், இந்திய அளவில் உள்ள சிறந்த டி20 வீராங்கனைகள் ஆகிய காரணங்களால் மூன்று அணிகள் தேர்வு செய்து தொடர் நடத்துவது கடினம், என்றும் இரண்டு அணிகள், மூன்று போட்டிகளில் ஆடவே அதிக வாய்ப்புள்ளது என்றும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெற்றி பெறுமா?

வெற்றி பெறுமா?

அதிலும், இந்த முறை மதிய நேரத்தில் மகளிர் போட்டியை நடத்தாமல் இரவு 7 மணிக்கு தொடங்கும் வகையில் போட்டியை நடத்த திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பரிசோதனை முயற்சியில் வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Tuesday, February 26, 2019, 14:56 [IST]
Other articles published on Feb 26, 2019
English summary
Women T20 matches to be conducted during IPL 2019
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X