மானம் கப்பல் ஏறி இருக்கும்.. இந்திய அணியை காப்பாற்றிய தீப்தி சர்மா.. ஆசிய கோப்பையில் ஹாட்ரிக் வெற்றி

சில்ஹட் : ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் யுஏஇ அணியை வீழ்த்தி இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

இன்றைய ஆட்டத்தில் கேப்டன் ஹ்ர்மன்பிரித் கவுர் களமிறங்காமல் ஓய்வு எடுத்து கொள்ள, ஸ்மிருதி மந்தானா கேப்டனாக செயல்பட்டார்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. மற்ற வீராங்கனைக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதற்காக மந்தானா கீழ்வரிசையில் பேட்டிங் செய்தார்.

மகளிர் ஆசிய கோப்பை.. முதல் போட்டியிலேயே இந்தியா அபாரம்.. இலங்கையை துவம்சம் செய்த இந்திய வீராங்கனைகள்மகளிர் ஆசிய கோப்பை.. முதல் போட்டியிலேயே இந்தியா அபாரம்.. இலங்கையை துவம்சம் செய்த இந்திய வீராங்கனைகள்

திணறிய இந்திய மணி

திணறிய இந்திய மணி

கடந்த ஆட்டத்தில் மலேசியாவுக்கு எதிராக அரைசதம் விளாசிய மேக்னா யுஏஇக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 10 ரன்கள் எடுத்தார். விக்கெட் கீப்பா பேட்டரான ரிச்சா கோஷ் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். தயலான் ஹேமலதா 2 ரன்களில் வெளியேற, இந்திய மகளிர் அணி 20 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

காப்பாற்றிய தீப்தி -ஜெமிமா

காப்பாற்றிய தீப்தி -ஜெமிமா

இதனையடுத்து இந்திய அணியின் ஜெமிமா ரொட்ரிகியூஸ் மற்றும் கடந்த ஒரு வாரமாக இங்கிலாந்து நாட்டினரை அலறவிட்ட தீப்தி சர்மாவும் பார்ட்னர்ஷிப் அமைத்த ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 128 ரன்களை சேர்த்தது. தீப்தி சர்மா 49 பந்துகளில் 64 ரன்களும், ஜெமிமா 45 பந்துகளில் 75 ரன்களும் எடுத்துள்ளது.

ஒருநாள் போட்டி?

ஒருநாள் போட்டி?

இறுதியில் பூஜா 13 ரன்களும், கிரண் பிரபு 10 ரன்களும் எடுக்க, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து 179 ரன்கள் எடுத்தாஙல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய யுஏஇ அணி, இது ஒரு டி20 போட்டி என்பதை மறந்து ஒருநாள் போட்டி போல் விளையாடியது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

யுஏஇ அணியின் தொடக்க வீராங்கனைகள் தீர்தா சதீஷ் 1 ரன்னிலும், ஈஷா 4 ரன்களிலும். நடாஷா டக் அவுட்டாகியும் வெளியேற அந்த அணி 5 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து கவிஷா 54 பந்துகளில் 30 ரன்களும், குஷி சர்மா 50 பந்துகளில் 29 ரன்களும் எடுக்க, 20 ஓவர் முடிவில் யுஏஇ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் மட்டுமே இழந்து தோல்வியை தழுவியது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Womens asia cup 2022 – india registered hattrick win by beating uae
Story first published: Tuesday, October 4, 2022, 18:42 [IST]
Other articles published on Oct 4, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X