For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பையில் இந்திய மகளிர் அணி ஆதிக்கம்.. வரலாற்றை படித்தால் ஆச்சரியப்படுவீங்க.. செம கெத்துங்க !

டாக்கா : மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஒன்றாம் தேதி தொடங்கும் நிலையில் அந்த தொடரில் இதுவரை யார் கோப்பையை வாங்கி இருக்கிறார்கள் என்று தற்போது பார்க்கலாம்.

சமீப காலமாக இந்திய ஆடவர் அணி போட்டிகளை ரசிகர்கள் எந்த அளவுக்கு விரும்பி பார்ப்பார்களோ, அதற்கு சவால் விடும் வகையில் மகளிர் போட்டிகளும் தற்போது பிரபலமடைந்து வருகிறது.

பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் ஆடவர் கிரிக்கெட்டில் எந்த அளவுக்கு இடம் கிடைக்குமோ அதையே மிஞ்சும் அளவுக்கு தற்போது மகளிர் கிரிக்கெட்டில் நடைபெற்ற மான்கட் விவகாரம் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது.

2022 மகளிர் ஆசிய கோப்பை டி20 ..இந்திய அணியில் நட்சத்திர வீராங்கனைக்கு வாய்ப்பு..எந்த சேனலில் காணலாம்2022 மகளிர் ஆசிய கோப்பை டி20 ..இந்திய அணியில் நட்சத்திர வீராங்கனைக்கு வாய்ப்பு..எந்த சேனலில் காணலாம்

முதல் தொடர்

முதல் தொடர்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2004 ஆம் ஆண்டு முதல் விளையாடப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த தொடர் முதல் நான்கு சீசன் ஒரு நாள் தொடராகவும், அதன் பிறகு தொடர்ந்து டி20 தொடராகவும் நடைபெற்று வருகிறது. இதுவரை ஏழு முறை மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றிருக்கிறது. இதில் ஆறு முறை இந்திய அணியே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறது. ஒரு முறை வங்கதேச அணி சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறது.

இந்தியா சாம்பியன்

இந்தியா சாம்பியன்

2004 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கை அணியும் மட்டும்தான் ஆசிய கோப்பை தொடரில் விளையாடியது. இதில் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா அனைத்திலும் வென்று முதல் முறையாக ஆசியக் கோப்பையை இந்தியா கைப்பற்றியது. 2006 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் முதல்முறையாக பாகிஸ்தான அணி பங்கேற்றது.

ஹாட்ரிக் பட்டம்

ஹாட்ரிக் பட்டம்

இதில் இறுதிப் போட்டியில் இலங்கையை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 2006 ஆம் ஆண்டு இந்தியாவின் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி ஹாட்ரிக் சாதனையை படைத்தது. 2008 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் இலங்கையை 177 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

 6வது பட்டம்

6வது பட்டம்

2012 ஆம் ஆண்டு முதல் டி20 தொடராக நடைபெற்ற ஆசிய கோப்பை தொடர் சீனாவில் முதன்முதலாக அரங்கேறியது. இதில் பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி ஐந்தாவது முறையாக பட்டத்தை தட்டிச் சென்றது.2016 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டி தாய்லாந்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி ஆறாவது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

 வங்கதேசம் சாம்பியன்

வங்கதேசம் சாம்பியன்

மலேசியாவில் 2018 ஆம் ஆண்டு ஏழாவது முறையாக ஆசிய கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் வங்கதேசம் இந்தியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. 2020 ஆம் ஆண்டு நடைபெற இருந்த ஆசிய கோப்பை போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

Story first published: Tuesday, September 27, 2022, 12:23 [IST]
Other articles published on Sep 27, 2022
English summary
Womens asia cup history and previous winners full details is here ஆசிய கோப்பையில் இந்திய மகளிர் அணி ஆதிக்கம்.. வரலாற்றை படித்தால் ஆச்சரியப்படுவீங்க.. செம கெத்துங்க
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X