For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவோட எதிர்கால கேப்டனா ஆகறதுக்கும் வாய்ப்பிருக்கு... என்னங்க அசார் இப்படி சொல்லிட்டாரு!

டெல்லி: ஐபிஎல் 2021 தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள் ள நிலையில் அனைத்து அணிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன.

ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பந்த் தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ஆப்ஷனாக வருங்காலத்தில் இருக்கக்கூடிய வீரர் குறித்து முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார்.

8 தினங்களில் துவக்கம்

8 தினங்களில் துவக்கம்

ஐபிஎல் 2021 தொடர் துவங்க இன்னும் 8 தினங்களே உள்ளன. இந்த தொடரில் பங்கேற்க மற்றும் கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. தினந்தோறும் பல்வேறு மாற்றங்கள் அணிகளில் நிகழ்ந்து வருகின்றன. புதிய வீரர்கள் இணைக்கப்படுகின்றனர். ஏற்கனவே உள்ளவர்கள் வெளியேறுகின்றனர்.

புதிய கேப்டன் ரிஷப்

புதிய கேப்டன் ரிஷப்

கடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார். இதையடுத்து தற்போது அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் சிறப்பான செயல்பாட்டை அளித்துவரும் அவர் டெல்லி கேபிடல்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வாளர்கள் சாய்ஸ்

இந்நிலையில் ரிஷப் பந்த் வருங்காலத்தில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிற்கான தேர்வாக இருக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த மாதங்களில் அவர் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் அனைத்து வடிவங்களிலும் தன்னை மேம்படுத்தியுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

இந்தியாவை மேம்படுத்தும்

இந்தியாவை மேம்படுத்தும்

மேலும் அவரது அதிரடி ஆட்டம் இந்தியாவை இன்னும் மேம்படுத்தும் என்றும் அசாருதீன் குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை டெல்லி கேபிடல்ஸ் அணியின் கோச் ரிக்கி பாண்டிங்கும் தெரிவித்துள்ளார். ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ரிஷப் ஏற்றுள்ளதன்மூலம் அவரது பேட்டிங் மேலும் மேம்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, April 1, 2021, 10:34 [IST]
Other articles published on Apr 1, 2021
English summary
His attacking cricket will stand india in good stead in times to come -Azharuddin
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X