"அவிங்க" கொண்டாடவே இல்லையாமே....??

By Sutha

சென்னை: பாகிஸ்தான் அணியை இந்தியா தோற்கடித்ததை இந்தியாவின் தலை முதல் வால் வரை உள்ள அனைத்துப் பகுதியிலும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த அதே வேளையில் இந்திய வீரர்களே அதைப் பற்றி பெரிதாக கண்டுக்கவே இ்ல்லையாம். இதெல்லாம் ஒரு வெற்றியா என்றும் அவர்கள் ஹாயாக இருந்தார்களாம். கொண்டாடவே இல்லையாம்.

ஒட்டுமொத்த நாடே இந்தியா -பாகிஸ்தான் போட்டியின் முடிவை கொண்டாடி வந்த வேளையில் இந்திய வீரர்கள் அடுத்த போட்டி குறித்த கவலைக்கும், சற்று ஓய்வுக்குமாக மாறி விட்டனராம்.

நாம் என்ன கோப்பையையா வென்றோம். ஒரு போட்டியில்தானே வென்றோம் என்பதே இந்திய வீரர்களின் மனநிலையாக இருந்துள்ளது.

அடிலைடைக் கலக்கிய கொண்டாட்டம்

அடிலைடைக் கலக்கிய கொண்டாட்டம்

இந்தியா பாகிஸ்தானை வென்றதுமே அடிலைடில் குழுமியிருந்த இந்தியர்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாட்டங்களில் குதித்து விட்டனர். சிட்டி சென்டர் பகுதியில் குழுமிய இந்தியர்கள் கொண்டாட்டங்களில் குதித்தனராம்.

அட போங்கப்பா

அட போங்கப்பா

ஆனால் நமது வீரர்களோ ஒரு கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லையாம். இந்திய அணியின் ஒரு முக்கிய நிர்வாகி இதுகுறித்து பிடிஐ செய்தியாளரிடம் கூறியபோது, இது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்பதாலும், முதல் போட்டி என்பதாலும் இவ்வளவு பரபரப்பு. எல்லோரும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால் இது ஒரு போட்டிதானே. கோப்பையையா வென்றோம். எனவே கொண்டாட்டத்துக்கு நேரம் இல்லை.

நாங்களே டயர்டாகிக் கிடக்கோம்

நாங்களே டயர்டாகிக் கிடக்கோம்

வீரர்கள் டயர்ட் ஆகியுள்ளனர். அவர்களுக்கு சற்று ஓய்வு தேவை. அதைத்தான் வீரர்கள் தற்போது செய்து வருகின்றனர் என்றார் அவர்.

மெல்போர்ன் பறந்த அணி

மெல்போர்ன் பறந்த அணி

போட்டியை முடித்த பிறகு அடுத்த நாள் காலை இந்திய அணியினர் அடிலைடிலிருந்து மெல்போர்னுக்குப் புறப்பட்டுப் போய் விட்டனர். 2 நாள் ஓய்வுக்குப் பின்னர் இந்திய அணியினர் பயிற்சியில் இறங்குகின்றனர்.

ரிலாக்ஸ் டோணி

ரிலாக்ஸ் டோணி

பாகிஸ்தான் போட்டி முடிந்ததும் கேப்டன் டோணி மிகவும் இயல்பாக இருந்தாராம். அணி இயக்குநர் ரவி சாஸ்திரியுடன் ரெஸ்டாரென்ட்டில் ரிலாக்ஸ்டாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாராம்.

அடுத்த கண்டத்தைத் தாண்டனுமே

அடுத்த கண்டத்தைத் தாண்டனுமே

அடுத்து இந்தியா, தென் ஆப்பிரிக்காவைச் சந்திக்கவுள்ளது. இந்த அணியை இதுவரை நாம் உலகக் கோப்பைப் போட்டிகளில் வென்றதே இல்லை. எனவே இந்தப் போட்டி இந்திய வீரர்களுக்கு முக்கியமானதாகும். இதில் வெல்லவும் இந்திய வீரர்கள் மும்முரமாக உள்ளனர்.

நீங்க ஆடுங்க பாஸ்.. நாங்க இருக்கோம்!

நீங்க ஆடுங்க பாஸ்.. நாங்க இருக்கோம்!

ஆனால் இந்திய ரசிகர்களுக்கு இப்படியெல்லாம் நெருக்கடி இல்லை. வென்றால் கொண்டாடித் தீர்ப்பார்கள். வெல்லாவிட்டால் ஒன்று திட்டித் தீர்ப்பார்கள் அல்லது சரி விடுங்கப்பா, அடுத்த போட்டியில் பார்த்துக் கொள்ளலாம் என்று போய் விடுவார்கள்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
The entire nation was in a mood to celebrate India's brilliant victory against Pakistan in the ICC Cricket World Cup opener in Adelaide but for Mahendra Singh Dhoni and his boys, the 'Mission Defence' has just begun and there is no time to celebrate.
Story first published: Tuesday, February 17, 2015, 15:36 [IST]
Other articles published on Feb 17, 2015
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X