For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா அரையிறுதிக்கு முன்னேறாது .. சொல்கிறார் "சி.எஸ்.கே." ஹஸ்ஸி

By Siva

மெல்போர்ன்: உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா தேர்வாகாது என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கென தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹஸ்ஸி.

இந்நிலையில் அவர் உலகக் கோப்பை போட்டி பற்றி கூறுகையில்,

இந்தியா

இந்தியா

இந்திய அணி அருமையானது. அந்த அணியில் ஏராளமான திறமையாளர்கள் உள்ளனர். அவர்கள் வருங்காலத்திலும் வலுவான அணியாக இருப்பார்கள் என்று எனக்கு தெரியும்.

அரையிறுதி

அரையிறுதி

உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா அரையிறுதிக்கு தேர்வாகாது. என்னைப் பொறுத்த வரையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் தான் அரையிறுதிப் போட்டிக்கு தேர்வாகும்.

ரஹானே

ரஹானே

விஜய் முரளி மற்றும் ரஹானேவின் ஆட்டத்தை பார்த்து அண்மையில் அசந்து போனேன்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் நிறைய சிறப்பான அணிகள் உள்ளதால் யார் உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று தற்போதே கணிக்க முடியாது என்றார் ஹஸ்ஸி.

Story first published: Thursday, February 19, 2015, 15:16 [IST]
Other articles published on Feb 19, 2015
English summary
Former Australia left-hander Mike Hussey said that though India is a great team it won't reach semifinals.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X