For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முக்கியமான 3 கேப்டன்கள்.. விராட் கோலி பெயரை சொல்லி.. பாராட்டித் தள்ளிய ஆஸி. ஜாம்பவான்!!

லண்டன் : விராட் கோலியை சிறந்த கேப்டன் என வர்ணித்துள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆலன் பார்டர்.

2௦19 உலகக்கோப்பை தொடரில் எந்த கேப்டன்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்பது குறித்து கேட்ட போது, விராட் கோலியை குறிப்பிட்டுள்ளார் ஆலன் பார்டர்.

World cup 2019 : Allan Border named three skippers to watch out for in world cup 2019

இந்த உலகக்கோப்பையில் முக்கிய கேப்டன்கள் என மூன்று பெயர்களை குறிப்பிட்டார் பார்டர். அவர்களை வரிசைப்படுத்த மறுத்த அவர், கோலி குறித்து தான் அதிகம் புகழ்ந்து பேசினார்.

விராட் கோலி வித்தியாசமான கேப்டன். அவர் கொஞ்சம் மூர்க்கத்தனமான வீரர். தன் இதயத்தை கையில் வைத்துக் கொண்டு இருக்கிறார் என்று கோலி பற்றி வித்தியாசமான கருத்துக்களை கூறினார் பார்டர்.

World cup 2019 : Allan Border named three skippers to watch out for in world cup 2019

மேலும், கோலி எதுவாக இருந்தாலும் முகத்தில் அதை காட்டிவிடும் கேப்டன் எனவும் கூறி, பலரும் பாதகமாக கூறும் விஷயத்தை சாதகமான விஷயமாக பாராட்டி பேசினார்.

விராட் கோலிக்கு அடுத்து இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் இருவரையும் பாராட்டி, இவர்கள் மூவரும் தான் உலகக்கோப்பையில் முக்கியமாக கவனிக்கத்தக்க கேப்டன்கள் என கூறினார் ஆலன் பார்டர்.

IND vs NZ : உலகக்கோப்பை கனவை கலைத்த கோலி, தோனி, ரோஹித்.. தலையில் துண்டு போட்டுக் கொண்ட ரசிகர்கள்! IND vs NZ : உலகக்கோப்பை கனவை கலைத்த கோலி, தோனி, ரோஹித்.. தலையில் துண்டு போட்டுக் கொண்ட ரசிகர்கள்!

ஆலன் பார்டர் விராட் கோலி குறித்து சாதகமாக பேசினாலும், இந்திய ரசிகர்கள் பலரே அவரது செயல்களை நல்ல கேப்டனுக்குரியவையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, May 25, 2019, 21:35 [IST]
Other articles published on May 25, 2019
English summary
World cup 2019 : Allan Border named three skippers to watch out for in world cup 2019
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X