For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெஸ்ட் இண்டீஸ்-ஐ பற்றித்தான் ஊரே பேசப் போகுது.. காரணத்தோடு கணிச்சு சொல்லும் அனில் கும்ப்ளே!!

பெங்களூர் : 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான நாள் நெருங்கி வருகிறது. இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி மற்ற அணிகளுக்கு எந்த நேரத்திலும் அதிர்ச்சி அளிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், அனில் கும்ப்ளே, வெஸ்ட் இண்டீஸ் அணியின் இரண்டு வீரர்கள் குறித்து பேசியுள்ளார்.

நான் நான் "டேஞ்சர்" பேட்ஸ்மேன்.. என்னைப் பார்த்து பயப்படுவாங்க.. ஆனா கேமரா முன்னாடி சொல்ல மாட்டாங்க!!

மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ்

மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணி சில மாதங்கள் முன்பு வரை பலவீனமான அணியாக கருதப்பட்டது. எனினும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் யாரும் எதிர்பாராத வெற்றிகளையும், ரன் குவிப்பையும் செய்து மிரட்டியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

அதிரடி பேட்ஸ்மேன்கள்

அதிரடி பேட்ஸ்மேன்கள்

அந்த அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெயில், பட்டையைக் கிளப்பி இங்கிலாந்து அணியை திணறடித்தார். இவருடன், ஐபிஎல் தொடரில் ஒரு கலக்கு, கலக்கிய அதிரடி ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல்-ம் உலகக்கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கும்ப்ளே ஆருடம்

கும்ப்ளே ஆருடம்

இவர்கள் இருவரும் தான் போட்டியை தனியாளாக மாற்றுவார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டத்தைத் தான் இங்கிலாந்து நாட்டில் பெரிதளவில் பேசப்படப் போகிறது என்றும் ஆருடம் கூறுகிறார் அனில் கும்ப்ளே.

அனுபவம் உதவும்

அனுபவம் உதவும்

மேலும், கிறிஸ் கெயில், ரஸ்ஸல் இருவரின் அனுபவம், இளம் கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு பெருமளவில் உதவி செய்யும் என்றும் கூறினார் அனில் கும்ப்ளே. இவர்கள் வருகையால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் பலமானதாக மாறிவிட்டது.

பந்துவீச்சு தான் பலவீனம்

பந்துவீச்சு தான் பலவீனம்

ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் பலவீனம் பந்துவீச்சு தான். அங்கே அனுபவம் இல்லை. பேட்டிங்கிற்கு ஈடு கொடுக்கும் வகையில் பந்துவீச்சை அந்த அணி சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார் கும்ப்ளே.

Story first published: Wednesday, May 22, 2019, 18:09 [IST]
Other articles published on May 22, 2019
English summary
World cup 2019 : Anil Kumble predicts 2 West Indies players to be game changers
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X