For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னாது இவரா? இலங்கையின் அணியின் புது கேப்டனை பார்த்து வாயடைத்துப் போன கிரிக்கெட் ரசிகர்கள்!

கொழும்பு : உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. ஒருநாள் அணிக்கு கடந்த மாதம் வரை கேப்டனாக இருந்த லசித் மலிங்கா நீக்கப்பட்டு புதிய கேப்டனை அறிவித்துள்ளது இலங்கை கிரிக்கெட் போர்டு.

அந்த புதிய கேப்டன் டிமுத் கருணாரத்னே. இவர் கடைசியாக 2015 உலகக்கோப்பை தொடரில் தான் ஒருநாள் போட்டியில் ஆடியுள்ளார். மொத்தம் 17 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். அப்படி ஒரு வீரரை வம்படியாக கேப்டனாக களமிறக்கியுள்ளது இலங்கை.

என்னப்பா இது.. தோனி அடுத்த போட்டியில் ஆடுவாரா.. மாட்டாரா? சுரேஷ் ரெய்னா என்ன சொல்றாரு? என்னப்பா இது.. தோனி அடுத்த போட்டியில் ஆடுவாரா.. மாட்டாரா? சுரேஷ் ரெய்னா என்ன சொல்றாரு?

திணறல்

திணறல்

இலங்கை அணி கடந்த ஒரு வருடமாக சரியான கேப்டன் கிடைக்காமல் திணறி வருகிறது. சங்கக்காரா, ஜெயவர்தனே ஆகிய மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற பின்னர், இலங்கை அணிக்கு ஓரளவு நிலையாக கேப்டன் பதவியில் இருந்தவர் ஆஞ்சலோ மேத்யூஸ்.

குழப்பத்தில் இலங்கை

குழப்பத்தில் இலங்கை

அவர் ஆசிய கோப்பை தொடர் தோல்விக்கு பின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின் ஒவ்வொரு தொடருக்கும் புதிய கேப்டனை நியமித்து குழப்பத்தில் இருந்தது இலங்கை கிரிக்கெட் போர்டு.

தொடர்ந்து தோல்வி

தொடர்ந்து தோல்வி

கடைசியாக இலங்கை அணியின் மூத்த வீரரான வேகப் பந்துவீச்சாளர் மலிங்காவை கேப்டனாக நியமித்தது. அதுவும் சரிவரவில்லை. அவரது தலைமையில் அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்தது இலங்கை அணி.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இந்த நிலையில், உலகக்கோப்பை தொடருக்கு உள்ளூர் ஒருநாள் போட்டித் தொடரில் நன்றாக ஆடிய கருணாரத்னேவை தேர்வு செய்துள்ளனர். உலகக்கோப்பை தொடருக்கு யாராவது நான்கு ஆண்டுகளாக சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆடாத வீரரை கேப்டனாக நியமிப்பார்களா? என கிரிக்கெட் ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.

முக்கிய காரணம் என்ன?

முக்கிய காரணம் என்ன?

இலங்கை கிரிக்கெட் போர்டு இவரை தேர்வு செய்ய முக்கிய காரணம், தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரை முதல் முறையாக 0-2 என கைப்பற்றி ஆசிய அளவில் சாதனை செய்த இலங்கை அணிக்கு கேப்டனாக இருந்தவர் கருணாரத்னே.

டெஸ்ட் வீரர்

டெஸ்ட் வீரர்

எனினும், டெஸ்ட் வீரரை உலகக்கோப்பை ஒருநாள் அணிக்கு தலைமை ஏற்கச் செய்வது எந்த வகையில் உதவும் என தெரியவில்லை. இவரது தலைமையில் மலிங்கா, ஆஞ்சலோ மேத்யூஸ் போன்ற அனுபவ வீரர்கள் ஆடவுள்ளனர்.

Story first published: Thursday, April 18, 2019, 16:50 [IST]
Other articles published on Apr 18, 2019
English summary
World cup 2019 : Dimuth Karunaratne appointed as Sri Lanka captain. He played his last ODI in 2015.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X