For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சும்மா இல்லை.. 12 வருட போராட்டம்.. முட்டி மோதி உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்த தினேஷ் கார்த்திக்!!

Recommended Video

Dinesh karthik in WC 2019 | முட்டி மோதி உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்த தினேஷ் கார்த்திக்!!- வீடியோ

மும்பை : சுமார் 12 ஆண்டுகள் கழித்து உலகக்கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார்.

2019 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். முன்னதாக, தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவாரா? என்ற சந்தேகம் நிலவியது.

பெங்களூருக்கு எதிராக இறுதி கட்டத்தில் பாண்டியா தாண்டவம்... 5 விக். வித்தியாசத்தில் வென்றது மும்பை பெங்களூருக்கு எதிராக இறுதி கட்டத்தில் பாண்டியா தாண்டவம்... 5 விக். வித்தியாசத்தில் வென்றது மும்பை

மாற்று விக்கெட் கீப்பர்

மாற்று விக்கெட் கீப்பர்

அதற்கு காரணம், இந்திய அணியில் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் இடங்களுக்கு அனைத்து பேட்ஸ்மேன்களும் இடம் பிடித்துவிட, தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் என்ற இடம் மட்டுமே பாக்கி. அதற்கு இளம் வீரர் ரிஷப் பண்ட் மற்றும் அனுபவ தினேஷ் கார்த்திக் போட்டி போட்டனர்.

கனவு முடிந்தது?!

கனவு முடிந்தது?!

ஐபிஎல்-லுக்கு முன் இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில், தினேஷ் கார்த்திக் இடம் பெறவில்லை. அதையடுத்து, தினேஷ் கார்த்திக் கனவு முடிந்தது. அவர் இனி இந்திய அணியில் இடம் பெறவே முடியாது. ரிஷப் பண்ட் தான் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் என்ற பேச்சுக்கள் அதிகம் கிளம்பியது.

இருவரில் ஒருவர்

இருவரில் ஒருவர்

ஆனாலும், இருவரில் ஒருவரை தான் மாற்று விக்கெட் கீப்பராக தேர்வு செய்வோம் என கூறியது தேர்வுக் குழு. அதற்கேற்ப, ஐபிஎல் தொடரில் கேப்டனாக பொறுப்பாக செயல்பட்டு வரும் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துள்ளது தேர்வுக் குழு.

12 ஆண்டுகளுக்குப் பின்..

12 ஆண்டுகளுக்குப் பின்..

2007 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்ற தினேஷ் கார்த்திக், அதன் பின் உலகக்கோப்பை வென்ற 2011 உலகக்கோப்பை, 2015 உலகக்கோப்பை அணிகளில் இடம்பெறவில்லை. சுமார் 12 ஆண்டுகள் கழித்து உலகக்கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ளார் தினேஷ் கார்த்திக்.

போராட்டம்

போராட்டம்

அந்த 12 ஆண்டுகளும் கடுமையாக போராடித் தான் அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த இடத்தை பெற இளம் வீரர்களோடு போட்டி போட்டு, விக்கெட் கீப்பர் என்பதை தாண்டி அதிரடி பேட்ஸ்மேன், பினிஷர் என தன் அடையாளத்தை மாற்றிக் கொண்டு முட்டி, மோதி உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார். இதுவே தினேஷ் ஆடும் கடைசி உலகக்கோப்பை தொடராகவும் இருக்கும்.

தினேஷ் கார்த்திக் செயல்பாடு

தினேஷ் கார்த்திக் செயல்பாடு

தினேஷ் கார்த்திக் இதுவரை 91 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 1738 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 31 மட்டுமே. இது அவரது ஒட்டுமொத்த போட்டிகளின் செயல்பாடு. எனினும், கடந்த 2018இல் இருந்து பல போட்டிகளின் வெற்றிக்கு காரணமாக விளங்கியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

Story first published: Tuesday, April 16, 2019, 11:23 [IST]
Other articles published on Apr 16, 2019
English summary
World cup 2019 : Dinesh Karthik will play in World cup after 12 years
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X