For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கம்பீர் : பேட்டிங் ஆவரேஜ் இவ்வளவு இருந்தும் இவரை டீம்ல எடுக்கலை.. என் இதயமே நொறுங்கிப் போச்சு!

மும்பை : 2019 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி சில நாட்கள் முன்பு அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு இருவரும் தேர்வாகவில்லை.

இவர்களில் ரிஷப் பண்ட்-ஐ தேர்வு செய்யாதது குறித்து பலரும் விமர்சித்தனர். அது பெரிய தவறு என பல முன்னாள் வீரர்கள் குற்றம்சாட்டினர்.

ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு, இஷாந்த் சர்மா.. உலகக்கோப்பையில் ஆடலாம்.. எப்படி? வெளியான புது தகவல்! ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு, இஷாந்த் சர்மா.. உலகக்கோப்பையில் ஆடலாம்.. எப்படி? வெளியான புது தகவல்!

அதிகம் பேச வேண்டும்

அதிகம் பேச வேண்டும்

ஆனால், அம்பதி ராயுடு தேர்வாகாதது பற்றி பலரும் பேசவில்லை. ஆனால், முன்னாள் வீரர் கெளதம் கம்பீர், ரிஷப் பண்ட் தேர்வாகாமால் இருப்பது குறித்து யாருமே பேசத் தேவையில்லை. ஆனால், அம்பதி ராயுடு நீக்கப்பட்டது குறித்து அதிகம் பேச வேண்டும் என கூறியுள்ளார்.

இதயத்தை நொறுக்கிவிட்டது

இதயத்தை நொறுக்கிவிட்டது

ராயுடு குறித்து பேசிய கம்பீர், பேட்டிங் சராசரி 48 வைத்திருந்தும், வயது 33 மட்டுமே ஆகி இருக்கும் நிலையில், அவரை கைவிட்டு விட்டார்கள். மற்ற எந்த தேர்வு முடிவுகளையும் விட இந்த முடிவு என் இதயத்தை நொறுக்கி விட்டது என உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.

சோகம்

சோகம்

இதே மாதிரி சூழ்நிலை 2007 உலகக்கோப்பை தொடரில் தனக்கு ஏற்பட்டது என தன் சோகத்தையும் பகிர்ந்து கொண்டார் கம்பீர். 2007 உலகக்கோப்பை தொடர் உட்பட பல போட்டிகளில் கம்பீர் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

பின்னடைவு இல்லை

பின்னடைவு இல்லை

ரிஷப் பண்ட் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறித்து பேசிய கம்பீர், "இது ரிஷப் பண்ட்டுக்கு பின்னடைவே இல்லை. இது எப்படி பின்னடைவு ஆகும்? அவர் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து ஆடவில்லை. அவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், அவர் அதை பிடித்துக் கொள்ளவில்லை. எனவே, அவருக்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை" என்றார்.

Story first published: Thursday, April 18, 2019, 21:18 [IST]
Other articles published on Apr 18, 2019
English summary
World cup 2019 : Gambhir supports Ambati Rayudu after omitted for world cup squad
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X