For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக்கோப்பையில் இந்த 4 வீரர்கள் தான் செமயா ஆடப் போறாங்க.. லிஸ்ட் போட்ட கம்பீர்.. அப்ப தோனி இல்லையா?

மும்பை: உலகக்கோப்பை தொடரில் குறிப்பிட்ட நான்கு வீரர்கள் தான் இந்திய அணிக்கு முக்கிய பங்காற்றுவார்கள் என நால்வரின் பெயர்களை கூறி உள்ளார் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர். அதில் தோனி இடம் பெறவில்லை.

உலகக்கோப்பை தொடரை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் இந்தியாவும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்திய அணியில் பல நட்சத்திர ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள் என்பதே அதற்கு முக்கிய காரணம்.

World cup 2019 : Gautam Gambhir points out 4 Indian players as important in World Cup

இது குறித்து முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கூறுகையில், உலகின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி, அதிரடி துவக்க வீரர் ரோஹித் சர்மா, நம்பர் 1 ஒருநாள் போட்டிகள் பந்துவீச்சாளர் பும்ரா மற்றும் சமீபத்தில் ஐபிஎல் தொடரில் ஆல்-ரவுண்டராக கலக்கிய ஹர்திக் பண்டியா ஆகிய நால்வரை குறிப்பிட்டு இவர்கள் தான் உலகக்கோப்பையில் இந்தியாவின் முக்கிய வீரர்கள் என்றார்.

நாட்டுக்கே தெரியும்.. அடுத்த கேப்டன் யாருன்னு.. அந்த வீரரை காட்டி.. கோலியை மட்டம் தட்டிய கம்பீர்!! நாட்டுக்கே தெரியும்.. அடுத்த கேப்டன் யாருன்னு.. அந்த வீரரை காட்டி.. கோலியை மட்டம் தட்டிய கம்பீர்!!

அதிலும் குறிப்பாக பும்ரா எப்படி பந்து வீசுகிறாரோ அது தான் இந்திய அணியின் பயணத்தை முடிவு செய்யும் என்றார். ஆனால், கம்பீர் ஐபிஎல் தொடரில் நல்ல பார்மில் இருந்த அனுபவ வீரர் தோனி பெயரை குறிப்பிடவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல போட்டிகளில் தோனி தன் விக்கெட் கீப்பிங் மற்றும் பொறுப்பான பேட்டிங்கால் வெற்றி தேடிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஏனோ தோனி பெயரை சொல்லவில்லை கம்பீர்!

கம்பீருக்கும், தோனிக்கும் மனக்கசப்புகள் இருந்ததால் தான் கம்பீர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்ற பேச்சு உண்டு. அதே சமயம், தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று அரசியலில் அடி எடுத்து வைத்துள்ள கம்பீர், தற்போதைய இந்திய கேப்டன் விராட் கோலியைத் தான் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் கூட அடுத்த கேப்டன் ரோஹித் சர்மா எனக் கூறி கோலியை விமர்சித்து இருந்தார்.

Story first published: Thursday, May 16, 2019, 16:48 [IST]
Other articles published on May 16, 2019
English summary
World cup 2019 : Gautam Gambhir points out 4 Indian players as important in World Cup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X