For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை மனம் போன போக்கில் ஆட விடுங்க.. அப்புறம் பாருங்க.. ஹர்பஜன் சூப்பர் ஐடியா!

மும்பை : ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக தோனி தலைமையில் ஆடிய ஹர்பஜன் சிங், தோனியால் இப்போதும் பந்துவீச்சாளர்களுக்கு பயங்காட்ட முடியும் என்கிறார். ஏன் தோனி அடித்து ஆட வேண்டும் என்பதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

தோனி சமீப காலங்களில் ஒருநாள் போட்டிகளில் முதலில் நிதானம் காட்டி, பின்னர் கடைசி நேரத்தில் வேகம் எடுப்பார். சில சமயம் இது சறுக்கலை உண்டாக்கி விடும்.

VIDEO: உலக கோப்பைக்கான பாடலை வெளியிட்ட ஐசிசி.. வாவ்... சூப்பர்...! நீங்க கேட்டுட்டீங்களா? VIDEO: உலக கோப்பைக்கான பாடலை வெளியிட்ட ஐசிசி.. வாவ்... சூப்பர்...! நீங்க கேட்டுட்டீங்களா?

யோசனை

யோசனை

இதற்கு மிடில்-ஆர்டரில் தோனி விக்கெட் வீழ்ச்சி, ரன் தேவை என பல்வேறு விஷயங்களையும் தன் மனதில் வைத்துக் கொண்டு ஆடுவது தான் காரணம். இதை மாற்றி, தோனி எப்படி ஆடினால் சரியாக இருக்கும், என ஹர்பஜன் சிங் அருமையான யோசனை கூறியுள்ளார்.

கோலி அனுமதி

கோலி அனுமதி

தோனி பேட்டிங் ஆட வந்தவுடன் அடித்து ஆட வேண்டும். அப்படித்தான் தோனியின் சிறந்த இன்னிங்க்ஸ்கள் நமக்கு கிடைத்தது. கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அனுமதி கொடுத்து, எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், தோனியை தன் மனம் போன போக்கில் அடித்து ஆட விட வேண்டும் என்கிறார் ஹர்பஜன்.

அடிச்சு ஆடணும்

அடிச்சு ஆடணும்

அதே சமயம், கோலி, ரோஹித், தவான், ராகுல் போன்ற வீரர்கள் முதல் நான்கு இடங்களில் பொறுப்பாக ஆடி போட்டியை எடுத்துச் செல்ல வேண்டும். மிடில் ஆர்டரில் தோனி, ஹர்திக் பண்டியா இருவரையும் அடித்து ஆட அனுமதிக்க வேண்டும் என்கிறார்.

அதற்கும் வழி உண்டு

அதற்கும் வழி உண்டு

தோனி சுழற் பந்துவீச்சாளர்கள் பந்துகளில் ரன் குவிக்க திணறுகிறார் என்று ஒரு பேச்சு உள்ளது. அதற்கும் வழி சொல்கிறார் ஹர்பஜன். சுழற் பந்துவீச்சாளர்களை தோனியால் அடித்து ஆட முடியும்.

பிரச்சனை இருக்காது

பிரச்சனை இருக்காது

எந்த சுழற் பந்துவீச்சாளராக இருந்தாலும், அவரது இரண்டாம் பந்தில் இருந்து சிக்ஸர் அடிக்கும் திறன் தோனிக்கு உண்டு. எனவே, தோனி அடித்து ஆட ஆரம்பித்தால் இந்த பிரச்சனை இருக்கவே இருக்காது என்கிறார் ஹர்பஜன்.

பயங்காட்ட முடியும்

பயங்காட்ட முடியும்

பந்துவீச்சாளர்கள் அதிரடியாக அடித்து ஆடும் பேட்ஸ்மேன், தட்டிவிட்டு ஒற்றை ரன்களாக எடுக்கும் பேட்ஸ்மேன், இருவரில் அதிரடி பேட்ஸ்மேனை கண்டு தான் பயப்படுவார்கள். சிஎஸ்கே வலைப் பயிற்சிகளில் பார்த்தவரை அப்படி பயங்காட்டும் திறமை தோனிக்கு இப்போதும் உண்டு என்கிறார் ஹர்பஜன் சிங்.

பழைய தோனி

பழைய தோனி

அதாவது பழைய தோனியாக, தோனி மாற அனுமதிக்க வேண்டும் என்கிறார் ஹர்பஜன் சிங். தோனி பொறுப்பான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதில் இருந்து, அதிரடி பேட்ஸ்மேன் என்ற நிலையை அடைந்தால் எதிரணிகள் மிரளும் என்பதே ஹர்பஜன் சொல்லும் யோசனை.

ஒரே ஒரு சிக்கல்

ஒரே ஒரு சிக்கல்

ஹர்பஜன் சிங் சொல்வதில் ஒரே ஒரு சிக்கல் தான் உள்ளது. ஒருவேளை இந்திய டாப் ஆர்டரான ரோஹித், தவான், கோலி விக்கெட்கள் விரைவில் சரிந்தால், அணியை காப்பாற்ற தோனி மட்டுமே இருப்பார். அப்போது மற்ற பேட்ஸ்மேன்களை அடித்து ஆட விட்டுவிட்டு தோனி நிதானம் காட்டுவது தான் ஒரே வழி.

Story first published: Saturday, May 18, 2019, 17:25 [IST]
Other articles published on May 18, 2019
English summary
World cup 2019 : Harbhajan Singh feels Dhoni should bat thee way he wants to
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X