For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த குழப்பத்தை எல்லாம் தீர்த்துக்க இதுதான் கடைசி வாய்ப்பு.. கோட்டை விட்றாதீங்க கேப்டன்!

லண்டன் : உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் உள்ள தனிப்பட்ட வீரர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் பலமான அணியாக காட்சி அளிக்கிறது.

ஆனால், நிலையான இந்திய அணி என்ற ஒன்றே இல்லை. உலகக்கோப்பை போட்டிகளில் எந்த 11 வீரர்களை கேப்டன் கோலி தேர்வு செய்யப் போகிறார், வேகப் பந்துவீச்சில் யார், யாரை தேர்வு செய்வது, மிடில்-ஆர்டர் பேட்டிங், நான்காவது வரிசை பேட்டிங்கில் யாரை களமிறக்கலாம் என பல குழப்பங்கள் உள்ளது.

இதற்கெல்லாம் விடை தேட கேப்டன் கோலிக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது.

இந்திய அணிக்கு பிரஷர் ஜாஸ்தி...! எப்படி ஜெயிக்க போறாங்கனு தெரியலையே...! கவலையில் தமிழ் புலவர் இந்திய அணிக்கு பிரஷர் ஜாஸ்தி...! எப்படி ஜெயிக்க போறாங்கனு தெரியலையே...! கவலையில் தமிழ் புலவர்

அது என்ன வாய்ப்பு?

அது என்ன வாய்ப்பு?

உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்தியா இரண்டு பயிற்சிப் போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த பயிற்சிப் போட்டிகளை இந்திய அணியில் கேப்டன் கோலி சரியாக பயன்படுத்தி அணியில் இருக்கும் இந்த விடை தெரியாத கேள்விகளுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

நான்காவது இடம்

நான்காவது இடம்

இந்திய பேட்டிங்கில் நான்காவது வரிசையில் எந்த வீரர் களமிறங்கப் போகிறார் என்பது பெரிய மர்மமாகவே உள்ளது. உலகக்கோப்பைக்கு முன் வரை அம்பதி ராயுடு அந்த இடத்தில் களமிறங்கி வந்தார். திடீரென அவரை உலகக்கோப்பை அணிக்கே தேர்வு செய்யாமல் ஆச்சரியம் அளித்தனர்.

இருவர்

இருவர்

இந்த நிலையில், விஜய் ஷங்கர் அல்லது ராகுல் மட்டுமே நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்புள்ள வீரர்கள். தினேஷ் கார்த்திக்கை கூட அந்த இடத்தில் ஆட வைக்கலாம். ஆனால், கேப்டன் கோலி அல்லது பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் இருந்து அந்த முயற்சிக்கான எந்த அறிகுறியும் இல்லை.

விஜய் ஷங்கர் ஓகே

விஜய் ஷங்கர் ஓகே

எனவே, பயிற்சிப் போட்டியில் ராகுல் மற்றும் விஜய் ஷங்கரை நான்காம் வரிசையில் இறக்கிப் பார்க்கலாம். இதில் விஜய் ஷங்கர் ஏற்கனவே, சில போட்டிகளில் நான்காம் இடத்தில் களமிறங்கி ஓரளவு சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார்.

சரியாக வருமா?

சரியாக வருமா?

ஆனால், துவக்க வீரர் ராகுல் இதுவரை மிடில் ஆர்டரில் ரன் குவித்ததில்லை. அவர் தற்போது டாப் பார்மில் இருந்தாலும், மிடில் ஆர்டர் அவருக்கு சரியாக வருமா என்பதை கோலி கண்டுபிடித்தாக வேண்டும்.

கேதார் ஜாதவ் பேட்டிங்

கேதார் ஜாதவ் பேட்டிங்

அடுத்து ஐபிஎல் தொடரில் பார்ம் அவுட் ஆன கேதார் ஜாதவ் பார்மில் இருக்கிறாரா? இல்லையா? என்பதை கண்டறிய வேண்டும். இதற்கு ஒரே வழி ஆறாம் இடத்தில் பேட்டிங் செய்து வரும் அவரை, இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் ஆட வைப்பதுடன், சூழ்நிலைக்கு ஏற்ப அவரை சில இடங்கள் முன்னே பேட்டிங் செய்ய அனுமதித்து, அவர் பேட்டிங் பார்மை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

விஜய் ஷங்கர் பந்துவீச்சு

விஜய் ஷங்கர் பந்துவீச்சு

விஜய் ஷங்கர் சர்வதேச போட்டிகளில் தனக்கு கிடைத்த பேட்டிங் வாய்ப்புகளில் அனைவரையும் ஈர்த்தார். ஆனால், ஆல்-ரவுண்டர் என்ற தன் அடைமொழிக்கு ஏற்ப அவர் பந்துவீச்சில் இதுவரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்ல.

அதிக ஓவர்கள்

அதிக ஓவர்கள்

விஜய் ஷங்கருக்கு இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் அதிக ஓவர்கள் பந்துவீச வாய்ப்பளித்து பார்க்க வேண்டும். ஒருவேளை பயிற்சிப் போட்டிகளில் அவர் சரியாக பந்து வீசவில்லை என்றால், உலகக்கோப்பை போட்டிகளில் அவரிடம் பந்தை கொடுக்காமல் இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு கோலி வரலாம்.

எந்த வேகப் பந்துவீச்சாளர்?

எந்த வேகப் பந்துவீச்சாளர்?

இந்திய அணிக்கு இருக்கும் மற்றொரு பிரச்சனை, எந்த இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களை உலகக்கோப்பை போட்டிகளில் ஆட வைக்கலாம் என்பது. பும்ரா நிச்சயம் அனைத்து போட்டிகளிலும் ஆடியே ஆக வேண்டும். ஆனால், புவனேஸ்வர் குமார், ஷமி ஆகிய இருவரில் யார் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக பந்து வீசுவார்கள் என்பதை கண்டறிய வேண்டும்.

அனைவருக்கும் வாய்ப்பு

அனைவருக்கும் வாய்ப்பு

உலகக்கோப்பைக்கு முன் இந்தியா வெறும் இரண்டு பயிற்சிப் போட்டிகளில் மட்டுமே பங்கேற்க உள்ளது என்ற நிலையில், அணியில் உள்ள 15 வீரர்களுக்கும் வாய்ப்பு அளிப்பது என்பது நடக்காத காரியம்.

யார் ஆடலாம்?

யார் ஆடலாம்?

எனவே, இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் வகையில் முக்கிய வீரர்கள் அனைவரையும் இரண்டு போட்டிகளிலும் விளையாட அனுமதிக்க வேண்டும். 2-3 வீரர்களுக்கு பயிற்சிப் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், முக்கிய வீரர்கள் தயார் நிலையில் இருப்பது அவசியம். இதையும் கோலி சமாளிக்க வேண்டும்.

Story first published: Friday, May 24, 2019, 16:08 [IST]
Other articles published on May 24, 2019
English summary
World cup 2019 : How should India use the warm up matches?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X