For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய கிரிக்கெட் அணிக்கு இனிமே “காவி” உடை.. தேர்தல் “முடிவு”க்குப் பின் வெளியே வந்த பூனைக்குட்டி!

லண்டன் : 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அதிக "ஆரஞ்சு" நிறம் கலந்த ஆடை அணிந்து விளையாட உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. (ஆரஞ்சுன்னா இப்போதைக்கு அது "அந்த" நிறம் தானேப்பா?)

சரியாக தேர்தல் முடிவு வரும் வரை மறைத்து வைக்கபட்டு, பின்னர் திட்டமிடப்பட்டு இந்த செய்தி வெளியாகி இருக்கிறதோ என்ற சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளது இந்த ஆடை விவகாரம்.

நம்பிய ரசிகர்கள்

நம்பிய ரசிகர்கள்

2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் ஆடை என எப்போதும் இந்தியா அணியும் நீல நிற ஆடை ஒன்றை ஐபிஎல் தொடருக்கு முன் அறிமுகம் செய்தனர். எல்லா இந்திய ரசிகர்களும் அதுதான் இந்திய அணியின் ஆடை என நம்பி இருந்தனர்.

இரண்டு ஆடைகள்

இரண்டு ஆடைகள்

ஆனால், இப்போது அது மட்டுமே இந்திய அணியின் ஆடை இல்லை. இன்னொரு ஆடையும் உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அது எப்படி இரண்டு ஆடைகள் சாத்தியம்? சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), எடுத்த முடிவு தான் இதற்கு காரணம். ஆனால், இந்த விஷயம் இதுவரை வெளியே தெரியவில்லை.

ஐசிசி முடிவா?

ஐசிசி முடிவா?

கால்பந்து போட்டிகளின் அணிகளைப் போல, சொந்த மண்ணில் ஆடும் போது அணிகள் ஒரு ஆடையையும், வேறு இடங்களுக்கு சென்று ஆடும் போது வேறு ஆடையையும் பயன்படுத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. இதை உலகக்கோப்பை தொடர் முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.

அதிக ஆரஞ்சு நிறம்

அதிக ஆரஞ்சு நிறம்

இதன்படி, உலகக்கோப்பை தொடரில் சில போட்டிகளில் இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடும் போட்டிகளிலும், மேலும் சில போட்டிகளிலும் அதிக ஆரஞ்சு, குறைந்த நீல நிறம் கொண்ட புதிய ஆடையை அணிந்து ஆடும் என தெரிய வந்துள்ளது.

இதுவரை சொல்லவில்லை

இதுவரை சொல்லவில்லை

மற்ற போட்டிகளில் வழக்கம் போல, தங்கள் நீல நிற ஆடையை அணிந்து ஆடுவார்கள் என தெரிகிறது. உலகக்கோப்பை தொடரில் இரண்டு ஆடை பயன்படுத்தப் போகிறார்கள் என்ற செய்தி இதுவரை எங்குமே வெளியாகவில்லை. சரியாக தேர்தல் முடிந்த உடன் இந்த செய்தி வெளியாகி இருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி விட்டுள்ளது. அது என்ன?

இந்தியா மட்டும் தானா?

இந்தியா மட்டும் தானா?

இந்தியா, தவிர்த்து மற்ற அணிகள் யாரும் இரண்டு ஆடைகள் பயன்படுத்தப் போவதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை. அப்படிப் பார்த்தால், உலகக்கோப்பை தொடரில் இந்தியா மட்டும் தான் இரண்டு ஆடைகளை பயன்படுத்தப் போகிறதா?

ஐசிசி கூறியதா?

ஐசிசி கூறியதா?

மற்ற அணிகள் இரு ஆடைகள் பயன்படுத்தப்போவது இல்லை என்றால் குறிப்பாக ஆரஞ்சு நிற ஆடையை பயன்படுத்த வேண்டி இந்திய கிரிக்கெட் அணி இரண்டு ஆடை முறையை தானே வலிந்து செயல்படுத்துகிறதா?

முன்பே கூறவில்லை

முன்பே கூறவில்லை

இந்தியாவின் உலகக்கோப்பை ஆடை என நீல நிற ஆடை அறிமுகம் செய்த போதே இந்த ஆரஞ்சு நிற ஆடையை அறிமுகம் செய்து இருக்கலாம். அல்லது அது பற்றிய தகவலை கூறி இருக்கலாமே.. ஏன் கூறவில்லை?

Story first published: Friday, May 24, 2019, 9:59 [IST]
Other articles published on May 24, 2019
English summary
World cup 2019 : India will wer Orange jersey for away matches says reports
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X