For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்திக் பண்டியாவை வைத்து.. விஜய் ஷங்கரை செமையாக கலாய்த்த சேவாக்..! ஏங்க இப்படி?

மும்பை : உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அம்பதி ராயுடு, ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்களை பின்தள்ளி, விஜய் ஷங்கர் இடம் பெற்றார்.

அப்போது தன் தேர்வை நியாயப்படுத்த, விஜய் ஷங்கர் ஆல்-ரவுண்டராக செயல்படுவார். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என முப்பரிமான (3D) வீரராக இருப்பார் என்பதை சுட்டிக் காட்டி பேசி இருந்தார் தேர்வுக் குழு தலைவர் பிரசாத்.

தல தோனி இல்லைன்னா நான் இல்ல.. அவரால் தான் இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறேன்.. சொல்றது யாருன்னு பாருங்க தல தோனி இல்லைன்னா நான் இல்ல.. அவரால் தான் இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறேன்.. சொல்றது யாருன்னு பாருங்க

3டி கண்ணாடி

3டி கண்ணாடி

அதன்பின் தன்னை தேர்வு செய்யாததால் கடுப்பில் இருந்த அம்பதி ராயுடு, தான் முப்பரிமான வீரர்கள் ஆடும் உலகக்கோப்பை தொடரை முப்பரிமான (3டி) கண்ணாடி அணிந்து கொண்டு பார்க்க உள்ளதாக சூசகமாக கூறி கலாய்த்து இருந்தார்.

முப்பரிமானம்

முப்பரிமானம்

அப்போது முதல் முப்பரிமானம் என்பது இந்திய கிரிக்கெட் உலகில் பிரபலமாக மாறி விட்டது. அதை வைத்து ஹர்திக் பண்டியாவை உயர்த்திப் பேசி, விஜய் ஷங்கரை மறைமுகமாக கலாய்த்துள்ளார் சேவாக். அப்படி என்ன சொன்னார்?

சேவாக் சொன்னது என்ன?

சேவாக் சொன்னது என்ன?

"பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கும் ஹர்திக் பண்டியா அருகில் ஒருவரும் வர முடியாது. அப்படி யாராவது இருந்தால், பிசிசிஐ தேர்வு செய்த முப்பரிமான வீரர்கள் யாரேனும் அவருக்கு அருகே (திறமையில்) இருந்தால், பண்டியா மீண்டும் அணியில் இடம் பிடித்து இருக்கவே முடியாது" என்றார் சேவாக்.

பண்டியா தடை

பண்டியா தடை

முப்பரிமான வீரர் என விஜய் ஷங்கரைத் தான் கலாய்த்துள்ளார் சேவாக். மேலும், அவர் குறிப்பிடுவது போல, ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது சர்ச்சைப் பேச்சால் ஹர்திக் பண்டியா தடை செய்யப்பட்டார்.

ஒரே வரியில்..

ஒரே வரியில்..

அப்போது அவரது இடத்திற்கு வந்தவர் தான் விஜய் ஷங்கர். பேட்டிங்கில் ஓரளவு தன் திறனை நிரூபித்த விஜய் ஷங்கர், பந்துவீச்சில் பெரிய அளவில் எடுபடவில்லை. இதையெல்லாம் சேர்த்து வைத்து ஒரே வரியில் விஜய் ஷங்கரை கலாய்த்து, ஹர்திக் பண்டியாவை உயர்த்திப் பேசி இருக்கிறார் சேவாக்.

ஐபிஎல் பார்ம் மோசம்

ஐபிஎல் பார்ம் மோசம்

விஜய் ஷங்கர் ஐபிஎல் தொடரில் படுமோசமாக செயல்பட்ட நிலையில், உலகக்கோப்பை அணியில் களமிறங்க வாய்ப்பு கிடைக்குமா அல்லது அவரை பெஞ்சில் உட்கார வைப்பார்களா? என்ற விவாதம் ஒருபக்கம் இருக்கும் நிலையில், சேவாக் அவருக்கு எதிராக கருத்து கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, May 15, 2019, 18:45 [IST]
Other articles published on May 15, 2019
English summary
World cup 2019 : No one closer to Hardik Pandya’s talent with bat and ball says Virender Sehwag
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X