For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி!!

லண்டன் : 2019 உலகக்கோப்பை தொடர் பல அணிகளுக்கு தன்மானப் பிரச்சனையான தொடர். அதில் ஒரு அணி பாகிஸ்தான்.

அதற்காக, இப்படியா ஒரு "ரூல்ஸ்" போடுவது? என கேட்பது போல, பாகிஸ்தான் வீரர்களுக்கு ஒரு கட்டுப்பாட்டை விதித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு.

IND vs NZ : பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா.. பௌலிங்கும் சுமார்.. நியூசிலாந்து அசத்தல் வெற்றி! IND vs NZ : பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா.. பௌலிங்கும் சுமார்.. நியூசிலாந்து அசத்தல் வெற்றி!

என்ன கட்டுப்பாடு?

என்ன கட்டுப்பாடு?

அந்த கட்டுப்பாடு இதுதான். இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும் ஜூன் 16 வரை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரை இங்கிலாந்துக்கு அழைத்து, தங்களுடன் தங்க வைத்துக் கொள்ளக் கூடாது.

காமெடி விதி

காமெடி விதி

எல்லா கிரிக்கெட் அணிகளும் வீரர்கள் குடும்பத்தினரை தங்களுடன் வைத்துக் கொள்ள, சில கட்டுப்பாடுகளை விதிக்கும். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு போல குறிப்பிட்ட பகை நாட்டுடன் போட்டியில் ஆடி முடிக்கும் வரை அனுமதிக்க மாட்டோம் என யாரும் கூறி இருக்க மாட்டார்கள். இந்த காமெடி விதியை பாகிஸ்தான் விதிக்க என்ன காரணம்?

என்ன காரணம்?

என்ன காரணம்?

பாகிஸ்தான் அணிக்கு உலகக்கோப்பை என்றாலே, இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற அழுத்தம் இருக்கும். இந்த முறை அதைத் தாண்டி, உலகக்கோப்பை நடக்கும் அதே மண்ணில் இரு ஆண்டுகள் முன்பு சாம்பியன்ஸ் ட்ராபி வென்ற அணி என்ற பெயரை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது.

பிரதமர் இம்ரான் கான்

பிரதமர் இம்ரான் கான்

அதை விட பெரிய அழுத்தம், உலகக்கோப்பை வென்று கொடுத்த பாகிஸ்தான் அணி கேப்டன் இம்ரான் கான், தற்போது பாகிஸ்தான் நாட்டின் பிரதமர். அவர் பிரதமராக இருக்கும் போது பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை வென்று அவரது பெருமையை தக்க வைக்க வேண்டும் என்ற கட்டாயமும் பாகிஸ்தான் அணிக்கு உள்ளது.

அழுத்தம்

அழுத்தம்

மேலும், இம்ரான் கான் வெளிப்படையாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி குறித்து விசாரித்து, நிச்சயம் உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என கிரிக்கெட் போர்டு நிர்வாகிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

திட்டம்

திட்டம்

ஒருவேளை, பாகிஸ்தான் உலகக்கோப்பை வெல்லாவிட்டாலும், அரையிறுதி செல்லாவிட்டாலும், இந்தியாவை வீழ்த்தி விட்டால் அதை பெரிய வெற்றிக் கொண்டாட்டம் போல அதை கொண்டாடி மற்ற தோல்விகளை மறக்கச் செய்து விடலாம் என திட்டமாகக் கூட இது இருக்கலாம்.

இருவருக்கு அனுமதி

இருவருக்கு அனுமதி

எனினும், இந்த விதியில் ஒரு நல்ல காரியமாக, சமீபத்தில் தன் குழந்தையை இழந்த ஆசிப் அலி தன் குடும்பத்தினருடன் இருக்கலாம் என அனுமதி அளித்துள்ளார்கள். அதே போல, சில தனிப்பட்ட காரணங்களுக்காக ஹாரிஸ் சோஹைல்-உம தன் குடும்பத்தினருடன் இருக்கலாம் என அனுமதி கொடுத்துள்ளார்கள்.

Story first published: Saturday, May 25, 2019, 23:34 [IST]
Other articles published on May 25, 2019
English summary
World cup 2019 : Pakistan players are allowed to stay with wives and family after India match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X