For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தயவுசெய்து ஜடேஜாவை பெஞ்ச்சுல உட்கார வைக்காதீங்க.. எதிரணியை மிரட்ட அவரை விட்டா ஆள் இல்லை!

மும்பை : 2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா என்ன செய்யப் போகிறது? எந்த 11 வீரர்கள் அணியில் இடம் பெறுவார்கள் என்பது குறித்த பல்வேறு விவாதங்கள் அரங்கேறி வருகின்றன.

மே 30 முதல் இங்கிலாந்தில் துவங்க உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான உத்தேச இந்திய அணியில் 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் போட்டிகளில் களமிறங்காமல், பெஞ்ச்சில் அமரப் போகும் வீரர்கள் பட்டியலில் ஜடேஜாவும் ஒருவர் என பொதுவான பார்வை உள்ளது. ஆனால், இது சரியா?

 உலக கோப்பையில் தல தோனி விளையாடினா நானும் விளையாடுவேன்.. எப்போ 2023ல்.. யாருப்பா அது..? உலக கோப்பையில் தல தோனி விளையாடினா நானும் விளையாடுவேன்.. எப்போ 2023ல்.. யாருப்பா அது..?

இதை மறந்து விடுகிறார்கள்

இதை மறந்து விடுகிறார்கள்

ஜடேஜா குறித்து பேசும் பலர் அவர் ஆல்-ரவுண்டர். பந்துவீச்சு நன்றாக இருக்கும். பேட்டிங் சுமார் என்ற அளவோடு நிறுத்திக் கொள்கிறார்கள். ஆனால், ஜடேஜா உலகின் சிறந்த பீல்டர்களில் ஒருவர். இதை பலரும் எளிதாக மறந்து விடுகிறார்கள்.

சிறந்த பீல்டர்கள் இல்லை

சிறந்த பீல்டர்கள் இல்லை

தற்போதைய உலகக்கோப்பைக்கான இந்திய அணியில், ஜடேஜா தவிர்த்து யாரையும் சிறந்த பீல்டர் என்ற வரிசையில் கொண்டு வரமுடியவில்லை. ஜடேஜாவுக்கு முன்பு, சுரேஷ் ரெய்னா சிறந்த பீல்டர் என்ற அடைமொழியோடு வலம் வந்தார். அதற்கு முன், யுவராஜ் சிங், முகமது கைஃப்.

சிறந்த பீல்டர்கள்

சிறந்த பீல்டர்கள்

இந்தியா ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறந்த பீல்டர்களை கொண்டு தான் வெற்றிகளை பெற்றுள்ளது. 2000ஆம் ஆண்டுக்கு பின் எப்போதும் இந்திய அணியில் ஒரு தலைசிறந்த பீல்டர் இருப்பது வாடிக்கையாகவே இருந்து வந்துள்ளது.முதலில் யுவராஜ் - கைஃப். பின்னர் யுவராஜ் - ரெய்னா. பின் ரெய்னா - ஜடேஜா. இவர்களை தாண்டி பந்து செல்வது அபூர்வம்.

பீல்டிங்

பீல்டிங்

ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணியில் பேட்டிங், பந்துவீச்சு குறித்து கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூட்டணி சிந்தித்த அளவு பீல்டிங் குறித்து சிந்திக்கவில்லையோ என்றே தோன்றுகிறது.

வெறும் ஸ்பின்னரா?

வெறும் ஸ்பின்னரா?

அப்படி யோசித்திருந்தால், ஜடேஜாவுக்கு மாற்றாக சாஹல் - குல்தீப் யாதவ்வை அவர்கள் தேர்வு செய்து இருக்க மாட்டார்கள். ஜடேஜாவை வெறும் ஸ்பின்னர் என்ற அளவில் மட்டுமே வைத்து, அவருக்கு மாற்றாக ஸ்பின்னர்களை அணியில் ஆட வைத்துள்ளார்கள்.

கில்லியாக இருக்கணும்

கில்லியாக இருக்கணும்

உலகக்கோப்பையில் மற்ற அணிகளைக் காட்டிலும் இந்தியா ஒரு படி முன்னே இருக்க நிச்சயம் பீல்டிங்கில் கில்லியாக செயல்பட வேண்டும். அதற்கு ஜடேஜா நிச்சயம் அணியில் ஆட வேண்டும். தற்போதைய இந்திய அணியில் ஒரு சிலரைத் தவிர எல்லோரும் நல்ல பீல்டர்கள் தான்.

ஜடேஜாவை கண்டு பயம்

ஜடேஜாவை கண்டு பயம்

ஆனால், எதிரணியை மிரட்டும் அளவுக்கு யாரும் இல்லை. ஆஸ்திரேலிய அதிரடி வீரர் மாக்ஸ்வெல் ஒருமுறை, ஜடேஜா பீல்டிங் செய்யும் பக்கம் நான் பந்தை அடிக்கவே பயப்படுவேன் என கூறினார். அப்படி எதிரணி வீரர்களை மிரட்டும் பீல்டிங் ஜடேஜாவுக்குத் தான் உள்ளது.

பார்மில் இருக்கிறார்

பார்மில் இருக்கிறார்

பீல்டிங் மட்டுமல்லாமல், தற்போது ஜடேஜா பந்துவீச்சிலும் நல்ல பார்மில் இருக்கிறார். ஐபிஎல் தொடரில் விக்கெட் வேட்டை நடத்தாவிட்டாலும், சிக்கனமாக பந்து வீசினார். கடந்த ஆண்டு இங்கிலாந்து தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக பந்து வீசினார்.

போனஸ்

போனஸ்

ஜடேஜாவின் பேட்டிங் சுமாராகத் தான் இருக்கும் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால், மற்ற சுழற் பந்துவீச்சாளர்களின் பேட்டிங்குடன் ஒப்பிட்டால், ஜடேஜாவை போனஸாக வைத்துக் கொள்ளலாம்.

அணிக்கு இழப்பு

அணிக்கு இழப்பு

எப்படி பார்த்தாலும், ஜடேஜாவை பெஞ்ச்சில் அமர வைப்பது இந்திய அணிக்கு இழப்பு தான். உண்மையில், எதிரணிகளை பீல்டிங்கில் மிரட்ட ஜடேஜாவை விட்டால், இந்திய அணியில் வேறு ஆள் இல்லை. தயவுசெய்து ஜடேஜாவை பெஞ்ச்சுல உட்கார வைக்காதீங்க!

Story first published: Saturday, May 18, 2019, 17:23 [IST]
Other articles published on May 18, 2019
English summary
World cup 2019 : Jadeja must play most of the matches in World cup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X