For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க!

மும்பை : 2019 உலகக்கோப்பை தொடர் நெருங்குகிறது. இந்த சமயத்தில் இந்திய அணி வெற்றி பெறுமா? என்னென்ன சாதகம்? பாதகம்? என பலரும் பல கோணத்தில் சிந்தித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், கடந்த காலங்களில் சச்சின் டெண்டுல்கர் பட்ட துன்பத்தை, விராட் கோலி இந்த உலகக்கோப்பையில் அனுபவிப்பாரோ என்ற கேள்வி எழுந்தது.

அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்! அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்!

சச்சின் காலத்தில்..

சச்சின் காலத்தில்..

கடந்த 1996, 1999, 2003 உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணியின் பேட்டிங்கில் சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக செயல்பட்டார். ஆனால், மற்ற வீரர்கள் ஒரீரு போட்டிகளில் மட்டுமே கை கொடுத்தார்கள்.

சச்சின் அவுட் ஆனால்..

சச்சின் அவுட் ஆனால்..

அப்போது சச்சின் பல போட்டிகளில் பேட்டிங்கை தன் தோள்களில் சுமந்தார். அந்த காலகட்டத்தில், சச்சின் ஆட்டமிழந்தால், "இனிமே போட்டியை பார்க்குறதுக்கு பார்க்காமலேயே இருக்கலாம்" என டிவியை மூடி வைத்து விட்டு, வேலையைப் பார்க்கப் போய் விடுவார்கள்.

விராட் கோலி நிலை

விராட் கோலி நிலை

கடந்த 2018இல் இந்தியா ஆடிய பல கிரிக்கெட் தொடர்களில் விராட் கோலி, அன்றைய சச்சின் போல தனியாளாக இந்திய பேட்டிங்கை சுமந்து சென்றார். பின்னர் 2019இல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களில் சில வீரர்கள் மீண்டும் பார்முக்கு திரும்பி கோலிக்கு இணையாக ஆடினாலும், உலகக்கோப்பை என்றதும், மீண்டும் நமக்கு பழைய நினைவுகள் வருவதை தடுக்க முடியவில்லை.

பயம்

பயம்

உலகக்கோப்பை தொடர் நடைபெறும் இங்கிலாந்து மண்ணில் கடந்த ஆண்டு இந்தியா ஆடிய போது, விராட் கோலி தவிர எந்த பேட்ஸ்மேனும் நம்பிக்கை தரவில்லை. அதே போல, உலகக்கோப்பை தொடரிலும் நடந்து விடுமோ? இந்தியாவுக்கு உலகக்கோப்பை கிடைக்காமல் போய் விடுமோ? என்ற பயம் எழுகிறது.

அணியின் உதவி தேவை

அணியின் உதவி தேவை

இது குறித்து சச்சினிடம் கேட்ட போது, "எப்போதும் ஒரீரு தனி வீரர்கள் போட்டிகளில் நன்றாக ஆடுவார்கள். ஆனால், அணியின் உதவி இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது" என்று தன் கருத்தை கூறினார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

மேலும், "ஒரு வீரர் நன்றாக ஆடுகிறார் என்பதால் நாம் தொடரை வென்று விட முடியாது. முக்கிய கட்டத்தில் மற்றவர்களும் நன்றாக ஆட வேண்டும். அது நடக்கவில்லை என்றால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்" என்றார் சச்சின்.

அணியாக சிந்திக்க வேண்டும்

அணியாக சிந்திக்க வேண்டும்

சுமார் 20 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் ஆடிய அனுபவம் உள்ள சச்சின் கூறும் இந்த வார்த்தைகளை முக்கியமாக எடுத்துக் கொண்டு இந்திய அணி இந்த உலகக்கோப்பையில் விராட் கோலி, பும்ரா போன்ற தனி வீரர்களை சார்ந்திருக்காமல், அணியாக சிந்தித்து, செயல்பட வேண்டும்.

Story first published: Thursday, May 23, 2019, 12:35 [IST]
Other articles published on May 23, 2019
English summary
World cup 2019 : Sachin Tendulkar says just because of Kohli India can’t win World Cup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X