For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. பொசுக்குன்னு சொன்ன கோலி! ஏன் கேப்டன் இப்படி?

Recommended Video

Virat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ

மும்பை : 2019 உலகக்கோப்பை தொடருக்கு இந்தியா தயாராக உள்ளது. இந்நிலையில், கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ஐபிஎல் தொடரில் பார்ம் இழந்த வீரர்கள் குறித்த பேச்சு வந்த போது, கோலி அந்த வீரர்கள் ஐபிஎல்-இல் பார்ம் இழந்தது சந்தோஷம் தான் என்று முதலில் கூறினார்.

எனினும், பின்னர் அது குறித்து விளக்கம் அளித்தார். பார்ம் இழந்த அந்த வீரர்கள் யார்? அவர்கள் பற்றி என்னதான் சொன்னார் கேப்டன் கோலி?

விமானத்தில் சக பயணிகளை சீண்டிய பிரபல முன்னாள் வீரர்..! கீழே இறக்கிவிட்டு மறுவேலை பார்த்த நிர்வாகம் விமானத்தில் சக பயணிகளை சீண்டிய பிரபல முன்னாள் வீரர்..! கீழே இறக்கிவிட்டு மறுவேலை பார்த்த நிர்வாகம்

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடிய குல்தீப் யாதவ் ஐபிஎல் தொடரில் மிக மோசமாக பந்து வீசி அதிர்ச்சி அளித்தார். சர்வதேச அரங்கில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் குல்தீப் யாதவ், ஐபிஎல் தொடரில் கொஞ்சம் சறுக்கி இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், படுமோசமாக பந்து வீசி ரன்களை வாரி இறைத்தார்.

கேள்வி

கேள்வி

அதே போல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய கேதார் ஜாதவ், பேட்டிங்கில் படுமோசமாக செயல்பட்டு அதிர்ச்சி அளித்தார். அவருக்கு பந்து வீசும் வாய்ப்பும் அதிகம் கிடைக்கவில்லை. இந்நிலையில், குல்தீப் யாதவ் ஐபிஎல் தொடரில் பார்ம் இழந்தது குறித்து கோலியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

மறுபக்கம்

மறுபக்கம்

அதற்கு பதில் அளித்த கோலி, "குல்தீப் போல அதிக வெற்றிகள் குவித்த ஒரு வீரர், அதன் மறுபக்கத்தையும் காண வேண்டும். அது உலகக்கோப்பையில் நடக்காமல் ஐபிஎல் தொடரில் நடந்தது மகிழ்ச்சியே! எங்கள் பந்துவீச்சில் சாஹலுடன் அவரும் ஒரு தூணாக இருப்பார்" என்றார்.

ஜாதவ் நிலை என்ன?

ஜாதவ் நிலை என்ன?

மேலும், "ஜாதவ்வுக்கும் இதே தான். அவர் சிறந்த ஆடுகளங்களில் ஆடவில்லை. மேலும், டி20 போட்டிகள் அந்த மாதிரி (கடினமானது). அவர்கள் (குல்தீப், ஜாதவ்), நல்ல முறையில் இருக்கிறார்கள் என உறுதியாக இருக்கிறேன்" என்று விளக்கம் அளித்தார் கேப்டன் கோலி.

வாய்ப்பு கிடைக்கும்

வாய்ப்பு கிடைக்கும்

கேதார் ஜாதவ், குல்தீப் யாதவ் ஐபிஎல் தொடரில் பார்ம் இழந்தாலும், அதை கோலி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. எனவே, அவர்கள் இருவருக்கும் அணியில் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது.

Story first published: Tuesday, May 21, 2019, 18:56 [IST]
Other articles published on May 21, 2019
English summary
World cup 2019 : Virat Kohli glad for Kuldeep Yadav, Kedar Jadhav poor form in IPL
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X