For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவங்க 2 பேரும் ஒழுங்கா ஆடலை.. அப்ப விஜய் ஷங்கருக்கு ரூட் கிளியர் ஆகுமா?

லண்டன் : இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற உலகக்கோப்பை பயிற்சிப் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கில் ஹர்திக் பண்டியா, ஜடேஜா தவிர்த்து யாரும் சொல்லிக் கொள்ளும்படி ஆடவில்லை.

இது இந்தப் போட்டியில் காயம் காரணமாக பங்கேற்காத விஜய் ஷங்கருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ரசிகர்கள் தொல்லை தாங்க முடியலப்பா.. எங்க போனாலும் வராங்க...!! புலம்பி தள்ளும் அதிரடி வீரர் இந்த ரசிகர்கள் தொல்லை தாங்க முடியலப்பா.. எங்க போனாலும் வராங்க...!! புலம்பி தள்ளும் அதிரடி வீரர்

வாய்ப்பு கடினம்

வாய்ப்பு கடினம்

ஐபிஎல் தொடரில் விஜய் ஷங்கர் பெரியளவில் ரன் குவிக்கவில்லை. அவரது பந்துவீச்சும் பெரிய அளவில் எடுபடவில்லை. இதனால், உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றாலும் விஜய் ஷங்கருக்கு அணியில் ஆடும் வாய்ப்பு கிடைப்பது கடினம் என கூறப்பட்டது.

ராகுலுக்கு வாய்ப்பு

ராகுலுக்கு வாய்ப்பு

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் விஜய் ஷங்கர் நான்காம் இடத்தில் ஆடுவார் என முன்பு கூறப்பட்டது. அவரது மோசமான ஐபிஎல் பார்ம் காரணமாக அந்த இடம் ஐபிஎல் தொடரில் அதிரடியாக ரன் குவித்த துவக்க வீரர் ராகுலுக்கு வழங்கப்படும் என்ற கருத்து இருந்தது.

ராகுல் ஏமாற்றினார்

ராகுல் ஏமாற்றினார்

அதற்கேற்ப, பயிற்சிப் போட்டிக்கு முன் காயமடைந்த விஜய் ஷங்கருக்கு பதிலாக, ராகுல் நான்காம் இடத்தில் பேட்டிங் செய்தார். ஆனால், அவர் வெறும் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

சாதகமான சூழல்

சாதகமான சூழல்

ராகுலுக்கு அடுத்து அந்த இடத்தில் பேட்டிங் செய்யக் காத்திருப்பவர் தினேஷ் கார்த்திக். பயிற்சிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றினார். ஆக, தினேஷ் கார்த்திக், ராகுல் இருவரும் முதல் பயிற்சிப் போட்டியில் சரியாக ஆடாதது விஜய் ஷங்கருக்கு சாதகமாக மாறி இருக்கிறது.

ரூட் கிடைத்துவிடும்

ரூட் கிடைத்துவிடும்

தற்போது கையில் ஏற்பட்டுள்ள காயத்தில் இருக்கும் விஜய் ஷங்கர், இரண்டாம் பயிற்சிப் போட்டியிலும் ஆடமாட்டார் என்றே தெரிகிறது. அந்தப் போட்டியிலும் தினேஷ் கார்த்திக் - ராகுல் சரியாக ரன் குவிக்கவில்லை என்றால் விஜய் ஷங்கருக்கு பயிற்சிப் போட்டியில் ஆடாமலேயே உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட ரூட் கிடைத்துவிடும்.

Story first published: Sunday, May 26, 2019, 12:36 [IST]
Other articles published on May 26, 2019
English summary
World cup 2019 : Will Vijay Shankar get batting chance as KL Rahul failed to prove?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X