பைனலில் கிடைச்ச ரிசல்ட் ரொம்ப அநியாயம்... ரொம்ப சீக்கிரமாக ஒத்துக் கொண்ட இயன் மார்கன்

லண்டன்: உலக கோப்பையின் இறுதிப்போட்டியில் கிடைத்த முடிவு நியாயம் இல்லாதது என்று சாம்பியனான இங்கிலாந்தின் கேப்டன் இயன் மார்கன் ஒப்புக் கொண்டுள்ளார்.

12வது உலக கோப்பை தொடர் கடந்த 14ம் தேதியோடு முடிவடைந்து. பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் ஒரு வழியாக விதிமுறைகளின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்று முதன் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.

கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடு, 44 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கோப்பையை வென்றது. இதையடுத்து, அந்நாட்டு மக்கள் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.

செம ட்விஸ்ட்! நான் கிரிக்கெட் ஆட வரலை.. ராணுவத்துக்கு போறேன்.. எல்லோருக்கும் ஷாக் கொடுத்த தோனி!

டிராவான ஆட்டம்

டிராவான ஆட்டம்

பரபரப்பான இறுதிப் போட்டியில் இரு அணிகளும் 241 ரன்கள் குவித்து டிரா செய்தது. அதன்பிறகு நடைபெற்ற சூப்பர் ஓவரும் டிரா ஆனது. இதனால் பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.

கேப்டன் கருத்து

கேப்டன் கருத்து

இந்த முடிவு குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த முடிவு குறித்து இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன் முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

சாதகமாக இல்லை

சாதகமாக இல்லை

பைனலில் எடுக்கப்பட்ட முடிவு நியாயமானதல்ல. இந்த போட்டியில் ஒரு தருணம் கூட ஒரு அணிக்கு சாதகமாக இருக்கவில்லை. இரு அணிகளுமே வெற்றி பெறும் நிலையில் விளையாடின.

குழப்பத்தில் வில்லியம்சன்

குழப்பத்தில் வில்லியம்சன்

சமபலத்துடன் விளையாடிய இரு அணிகளும் வெற்றி தகுதியானவர்கள். போட்டி முடிந்ததும் நான் வில்லியம்சனிடம் பேசினேன். அவரும் குழப்பத்தில் தான் இருந்தார்.

இருந்தாலும் மகிழ்ச்சியே

இருந்தாலும் மகிழ்ச்சியே

உலக கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்றதொரு பைனல் நடக்கவே இல்லை என்று சொல்லுவேன். மேலும் இது ஒரு சமமான போட்டி இல்லை. எது எப்படி இருந்தாலும் உலக கோப்பையை வென்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான் என்று கூறினார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
World cup final result unfair says England captain eoin morgan.
Story first published: Saturday, July 20, 2019, 21:09 [IST]
Other articles published on Jul 20, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X