For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி.யை அடித்து நொறுக்காவிட்டால், இவ்வளவு நாள் விளையாடியதில் அர்த்தமில்லை: கோஹ்லி கொந்தளிப்பு

By Veera Kumar

சிட்னி: ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்க இப்போ இல்லாவிட்டால் எப்போதான் முடியும் என்று தோள் தட்டியுள்ளார் விராட் கோஹ்லி.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 2 டெஸ்ட்டுகளை இழந்து, 2 டெஸ்டுகளை டிரா செய்தது. முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்டில் எந்த போட்டியிலும் வெற்றி பெறவில்லை. ஆனால், உலக கோப்பையில் இதுவரை ஆடிய 7 போட்டிகளிலும் இந்தியா வென்று அசத்தியுள்ளது.

இந்நிலையில், உலக கோப்பை அரையிறுதியில், சிட்னியில், நாளை ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்தியா. போட்டி குறித்து ஆஸ்திரேலிய வீரர்கள் மேக்ஸ்வெல், ஸ்மித் போன்றோர் கருத்து தெரிவிக்கையில், இந்தியா அடைந்த தோல்வியை சுட்டிக் காட்டி கேலி செய்தனர்.

கோஹ்லி பதிலடி

கோஹ்லி பதிலடி

ஆஸ்திரேலியர்களுக்கு பதிலடி தரும் விதமாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் செய்தி இணையதளம் ஒன்றுக்கு விராட் கோஹ்லி சிறப்பு பேட்டியளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: இந்தியா உலக கோப்பையில் விஸ்வரூபம் எடுத்து விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவை இப்போது அடிக்காவிட்டால் எப்போதுதான் அடிக்க முடியும்..

அர்த்தமே அதில்தான் உள்ளது

அர்த்தமே அதில்தான் உள்ளது

தொடர்ந்து 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்திய இந்திய அணி, ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் அடித்து நொறுக்கி வெற்றி பெற்றால்தான், இத்தனை நாட்களாக விளையாடியதற்கே அர்த்தம் கிடைக்கும்.

பவுலர்களின் பங்களிப்பு

பவுலர்களின் பங்களிப்பு

இந்திய அணி திடீரென மேம்பட காரணம், பவுலர்களின் பங்களிப்புதான். 7 போட்டிகளிலுமே எதிரணிகளை ஆல்-அவுட் செய்துள்ளோம் என்றால், எங்களது பந்து வீச்சாளர்களின் திறமைதான் அதற்கு காரணம்.

ஆக்ரோஷம்

ஆக்ரோஷம்

எங்களது பந்து வீச்சாளர்கள் புத்திசாலித்தனத்துடன், ஆக்ரோஷமாகவும் பந்து வீசுகிறார்கள். இதை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

திட்டம் போட்டு தூக்குறோம்

திட்டம் போட்டு தூக்குறோம்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்ததுமே, உலக கோப்பைக்கு இந்திய அணி தயாராகியது. குறுகிய தினங்களே இருந்த நிலையிலும், அணி சிறப்பாக தயாராகியது. எனவேதான், எங்களால் சிறப்பாக ஆட முடிகிறது. இவ்வாறு கோஹ்லி கூறினார்.

Story first published: Wednesday, March 25, 2015, 11:13 [IST]
Other articles published on Mar 25, 2015
English summary
Crediting bowlers for Indian team's remarkable turnaround after a winless show preceding the World Cup, star batsman Virat Kohli feels it is the perfect time to beat Australia in Thursday's semi-final and do justice to their performance in the showpiece event.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X