For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2014ன் முதல் சாதனை... மின்னல் வேக ஒரு நாள் சதம்.. நி்யூசி. வீரர் ஆண்டர்சன் அபாரம்

க்வீன்ஸ்டவுன்: ஒரு நாள் போட்டியில் மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார் நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன்.

க்வீன்ஸ்டவுனில் நடந்த மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டியின்போது இந்த சாதனையை அவர் படைத்தார்.

வெறும் 36 பந்துகளில் அவர் சதம் போட்டார். மேலும் இதுவரை குறைந்த பந்துகளில் சதம் போட்டிருந்த பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடியின் சாதனயைையும் கோரி முறியடித்தார்.

கடைசி வரை வெளுத்து வாங்கிய கோரி

கடைசி வரை வெளுத்து வாங்கிய கோரி

கடைசி வரை ஆட்டமே இழக்காமல் அடித்து வெளுத்த கோரி 47 பந்துகளில் 131 ரன்களைக் குவித்து மேற்கு இந்தியத் தீவுகளின் பந்து வீச்சை நாறடித்து விட்டார்.

அடேங்கப்பா... 14 சிக்ஸ்

அடேங்கப்பா... 14 சிக்ஸ்

தனது இன்னிங்ஸின்போது 14 சிக்ஸர்களைப் பறக்க விட்ட கோரி, 6 பவுண்டரிகளையும் விளாசினார். அதேபோல ஜெஸ்ஸி ரெய்டர் 51 பந்துகளில் 104 ரன்களைக் குவித்தார்.

21 போட்டிகளாக சுருக்கம்

21 போட்டிகளாக சுருக்கம்

3வது ஒரு நாள் போட்டியான இது, மழை காரணமாக தலா 21 ஓவர்களைக் கொண்டதாக சுருக்கப்பட்டது. நியூசிலாந்து அணி தனது இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் என்று முடித்தது.

ஒரே ஒரு பந்தில் அப்ரிடி சாதனை காலி

ஒரே ஒரு பந்தில் அப்ரிடி சாதனை காலி

முன்னதாக அப்ரிடி 37 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்திருந்தார். இது 1996ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது. அதை தற்போது 36 பந்துகளில் சதம் அடித்து, அதாவது ஒரு பந்து வித்தியாசத்தில் முறியடித்துள்ளார் கோரி.

வயசு 22தான்

வயசு 22தான்

22 வயதேயான கோரி, 5வது நிலை ஆட்டக்காரரகா இறங்கி கலக்கி விட்டார். போட்டியின் 18வது ஓவரின்போது இந்த சாதனை வந்து சேர்ந்தது.

பாவம் ராம்பால்...

பாவம் ராம்பால்...

மேற்கு இந்தியத் தீவுகளின் பந்து வீச்சாளர்களை நியூசி வீரர்கள் பதம் பார்த்து விட்டனர். ரவி ராம்பால் வீசிய 3 ஓவர்களில் 64 ரன்களை விளாசித் தள்ளி விட்டனர். பந்து வீசிய 6 பேரையும் வெளுத்து வாங்கி விட்டனர்.

அதி வேக சத சாதனையாளர்கள்

அதி வேக சத சாதனையாளர்கள்

கோரி 36 பந்துகள், அப்ரிடி 37, மார்க் பெளச்சர் 44, பிரையன் லாரா 45, ஷாஹித் அப்ரிடி 45.

Story first published: Wednesday, January 1, 2014, 11:04 [IST]
Other articles published on Jan 1, 2014
English summary
New Zealand's Corey Anderson today blasted the fastest century in One Day International history here at Queenstown Events Centre ground against West Indies. The left-handed Anderson brought up his hundred off just 36 balls, shattering the previous record held by Pakistan's Shahid Afridi. Anderson remained 131 not out (47 balls, 6x4, 14x6). New Zealand posted a mammoth 283/4 in 21 overs. Jesse Ryder too hit a quick ton, scoring 104 off 51 deliveries (12x4, 5x6).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X