For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்!

ஜெய்ப்பூர் : உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் சமீபத்தில் இந்தியாவில் திறக்கப்பட்டது.

Recommended Video

World’s 3rd largest cricket stadium to be built in Rajasthan

அஹமதாபாத் நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதை பிரம்மாண்டமான முறையில் திறந்து வைத்திருந்தனர்.

இந்த நிலையில், உலகின் மூன்றாவது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் பணிகளை ராஜஸ்தான் கிரிக்கெட் அமைப்பு விரைவில் துவங்க உள்ளது.

அப்பவே தெரிஞ்சு போச்சு.. மூக்கை உடைத்த பாக். ஜாம்பவான்.. வீறு கொண்டு எழுந்த சச்சின்!அப்பவே தெரிஞ்சு போச்சு.. மூக்கை உடைத்த பாக். ஜாம்பவான்.. வீறு கொண்டு எழுந்த சச்சின்!

புதிய கிரிக்கெட் ஸ்டேடியம்

புதிய கிரிக்கெட் ஸ்டேடியம்

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் அமைய உள்ள இந்த புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் சுமார் 75,000 இருக்கைகளுடன் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. உலகத்தரமான அளவில், நவீன வசதிகளுடன் இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் அமையும் என கூறப்படுகிறது.

நவீன வசதிகள்

நவீன வசதிகள்

பெரிய பெவிலியன் ஸ்டான்ட், கார்ப்பரேட் பாக்ஸ், நவீன கிளப் ஹவுஸ், இன்டோர் கேம்ஸ்-க்கான அனைத்து வசதிகள் உட்பட பிரம்மாண்டமான முறையில் இந்த ஸ்டேடியம் தயாராக உள்ளது. இதற்கான திட்டமிடலை செய்து முடித்துள்ளது ராஜஸ்தான் கிரிக்கெட் அமைப்பு.

100 ஏக்கர்

100 ஏக்கர்

நூறு ஏக்கரில் அமைய உள்ள இந்த மைதானம், ஜெய்ப்பூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோன்ப் கிராமத்துக்கு அருகே இடம் பெற உள்ளது. இன்னும் நான்கு மாதங்களில் இதற்கான பணிகள் துவங்க உள்ளன. இன்னும் பல வசதிகள் குறித்து நிர்வாகி ஒருவர் பகிர்ந்து கொண்டார்.

மற்ற வசதிகள்

மற்ற வசதிகள்

ஐசிசி விதிகளின் படி மின்விளக்குகள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஒளிபரப்பு குழுவிற்கு நவீன அறைகள், 4000 வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கான பார்க்கிங் இடம், இரண்டு ரெஸ்டாரன்ட் ஆகியவையும் இந்த மைதானத்தில் அமைய உள்ளது.

முதல் இரண்டு ஸ்டேடியம்

முதல் இரண்டு ஸ்டேடியம்

உலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானமான அஹமதாபாத்தின் மொடேரா ஸ்டேடியத்தில் 1.10 லட்சம் இருக்கைகள் உள்ளன. அதற்கு அடுத்த பெரிய ஸ்டேடியம் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் ஸ்டேடியம். அங்கே 1.02 இருக்கைகள் உள்ளன.

350 கோடி

350 கோடி

அவற்றுக்கு அடுத்த இடத்தில் 75,000 இருக்கைகளுடன் அமைய உள்ளது இந்த ஸ்டேடியம். முதற்கட்டமாக 45,000 இருக்கைகளும், இரண்டாம கட்டமாக 30,000 இருக்கைகளும் அமைக்கப்பட உள்ளன. இதற்காக 350 கோடி செலவிட உள்ளதாக ராஜஸ்தான் கிரிக்கெட் அமைப்பு கூறி உள்ளது.

Story first published: Saturday, July 4, 2020, 19:31 [IST]
Other articles published on Jul 4, 2020
English summary
World’s 3rd largest cricket stadium to be built in Rajasthan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X