For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு சிக்சருக்கு ஒரு கோடி.. பிராத்வெயிட்டை அன்றே 'புக்' செய்துவிட்டது டெல்லி டேர்டெவில்ஸ்

By Veera Kumar

கொல்கத்தா: நேற்று நடைபெற்ற, இங்கிலாந்துக்கு எதிரான, உலக கோப்பை டி20 கிரிக்கெட் இறுதி போட்டியின்போது, கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் நான்கு பந்துகளில் 4 சிக்சர்கள் விளாசி, மேற்கிந்திய தீவுகள் அணியை உலக கோப்பையை வெல்ல செய்த கார்லோஸ் பிராத்வெயிட் இன்று உலக கிரிக்கெட் ரசிகர்களின் உச்சரிப்புக்குறிய பெயருக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

பலரும் இதற்கு முன்பு பெரிதாக அறிந்திராத வீரர்தான் கார்லோஸ் பிராத்வெயிட். ஆனாலும், சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின்போது, இவரை ரூ.4.2 கோடிக்கு வாங்கியது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.

உலக கோப்பை தொடருக்கு முன்பாக மே.இ.தீவுகள் அணிக்காக வெறும் 2 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்த பிராத்வெயிட்க்கு, டெல்லி அணி இவ்வளவு பெரிய தொகையை ஏன் கொட்டி கொடுத்தது என்தற்கான விடையை ரசிகர்கள் நேற்றிரவுதான் தெரிந்து கொண்டனர்.

அவர் விளாசிய ஒரு சிக்சருக்கு ஒரு கோடி என்ற அளவில் டெல்லி டேர்டெவில்ஸ் முன்கூட்டியே கொடுத்துவிட்டது என்று ரசிகர்கள் புழகாங்கிதம் அடைகிறார்கள்.

நீங்கா பதிவு

நீங்கா பதிவு

மார்லன் சாமுவேல்ஸ் என்னதான் 85 ரன்கள் எடுத்தாலும், அவருக்கு மேன் ஆப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டிருந்தாலும், பிராத்வெயிட் அடித்த 4 பால், 4 சிக்சர் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் நீங்காத பதிவாகிவிட்டது. முன்னதாக 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார் இந்த ஆல்-ரவுண்டர்.

இரண்டே போட்டிகள்

இரண்டே போட்டிகள்

இப்படிப்பட்ட கார்லோஸ் பிராத்வெயிட் குறித்த சில சுவாரசிய தகவல்கள் இதோ: உலக கோப்பைக்கு முன்பாக மேற்கிந்திய தீவுகளுக்காக பிராத்வெயிட் ஆடியது வெறும் 2 டி20 போட்டிகள்தான்.

ரொம்ப கம்மி

ரொம்ப கம்மி

7 ஒருநாள் போட்டிகள் ஆடியுள்ள பிராத்வெயிட் 71 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி ரன் குவிப்பு 10.14 மட்டுமே. 3 விக்கெட்டுகளை, 5.65 என்ற எக்கனாமி ரேட்டில் வீழ்த்தியுள்ளார்.

மெதுவாக வாய்ப்பு

மெதுவாக வாய்ப்பு

2011ம் ஆண்டிலேயே மேற்கிந்திய தீவுகள் டி20 மற்றும் ஒன்டே அணிகளில் இடம் பிடித்திருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் ஆட 2015ம் ஆண்டு டிசம்பரில்தான் பிராத்வெயிட்க்கு வாய்ப்பு தரப்பட்டது.

விரைவில் பார்க்கலாம்

விரைவில் பார்க்கலாம்

பிராத்வெயிட் மற்றும் பாப் இசை கலைஞர் ரிகன்னா ஆகியோர் ஒன்றாக படித்தவர்கள் என்பதும், டெல்லி டேர்டெவில்ஸ் அணி இவரை ரூ.4.2 கோடிக்கு வாங்கியது என்பதும் கூடுதல் தகவல். எனவே இந்திய ரசிகர்கள் பிராத்வெயிட் அதிரடியை மீண்டும் காண, இன்னும் அதிக காலம் காத்திருக்க வேண்டியதில்லை. நடப்பு ஐபிஎல் தொடர் ஏப்ரல் 8ல் தொடங்க உள்ளது.

Story first published: Monday, April 4, 2016, 11:56 [IST]
Other articles published on Apr 4, 2016
English summary
Needing 19 off 6 balls for the win, Brathwaite hit Ben Stokes for four consecutive sixes to clinch a second WT20 for the West Indies.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X