For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மொகாலி கிரவுண்டில் ஆடுவது ஆஸ்திரேலியாவுக்கு சாதகம்.. மேக்ஸ்வெல் சொல்வதை கேளுங்க

By Veera Kumar

மொகாலி: உலக கோப்பை டி20 கிரிக்கெட்டில், இந்தியாவுக்கு எதிரான நாளைய 'காலிறுதி' போட்டி மொகாலியில் நடப்பது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சாதகமானது என்று அந்த அணி வீரர் கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்தார்.

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் உலக கோப்பை டி20 கிரிக்கெட்டின் சூப்பர்-10 போட்டி மொகாலி கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.

இதில் வெற்றி பெறும் அணிதான் குரூப்-2ல் இருந்து (நியூசிலாந்து ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது) அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்பதால், இப்போட்டி காலிறுதி என்றே செல்லமாக அழைக்கப்படுகிறது.

காலிறுதி

காலிறுதி

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய வெப்சைட்டுக்கு பேட்டியளித்துள்ள மேக்ஸ்வெல் இதுகுறித்து கூறியதாவது: இந்தியாவுக்கு எதிரான போட்டி என்பது காலிறுதி போட்டிதான்.

நெருக்கடி

நெருக்கடி

இருப்பினும் ஆஸ்திரேலிய அணி, இப்படிப்பட்ட நெருக்கடியான கட்டத்தைதான் விரும்புகிறது. கடந்த 50 ஓவர் உலக கோப்பையின்போதும் நெருக்கடிக்கு நடுவே ஆடிதான் வெற்றி பெற்றோம்.

ஆஸ்திரேலிய மைதானம்

ஆஸ்திரேலிய மைதானம்

மொகாலி கிரிக்கெட் மைதானம் ஓரளவுக்கு ஆஸ்திரேலிய மைதானங்களை போல உள்ளது. இந்த பிட்சில் பந்து பவுன்ஸ் ஆகிறது. மைதானமும் பெரிதாக உள்ளது. எனவே சொந்த நாட்டில் ஆடுவதைப்போலத்தான் உள்ளது. இது ஆஸ்திரேலியாவுக்கு பலம். இவ்வாறு மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆதிக்கம்

இந்தியா ஆதிக்கம்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, அவர்கள் சொந்த மண்ணில் வைத்தே 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்து வெற்றி வாகை சூடியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, March 26, 2016, 16:21 [IST]
Other articles published on Mar 26, 2016
English summary
Australian all-rounder Glenn Maxwell is happy that they will face India in the "quarter-final" of ICC World Twenty20 at the PCA Stadium in Mohali, the venue, which according to him "suits" the team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X