For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4 வருடத்திற்கு ஒருமுறை டுவென்டி 20 உலகக் கோப்பையை நடத்தினால் போதுமே... பிளமிங்

க்வீன்ஸ்டவுன், நியூசிலாந்து: டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டி தற்போது 2 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதை 4 வருடத்திற்கு ஒரு முறை என்று மாற்ற வேண்டும் என்று முன்னாள் நி்யூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு இந்தியாவில் டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டித் தொடர் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் பிளமிங்.

டுவென்டி 20 போட்டிகள் கிரிக்கெட்டின் நீண்ட கால எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டால் நல்ல விஷயம்தான் என்றாலும் கூட அதை சரியான முறையில் கையாள வேண்டியது அவசியம் என்றும் பிளமிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியிலிருந்து...

ஆரோக்கியமானதுதான்

ஆரோக்கியமானதுதான்

டுவென்டி 20 போட்டிகள் ஆரோக்கியமானவைதான். அதில் சந்தேகம் தேவையில்லை. இருப்பினும் அதை சரியான முறையில் கையாள வேண்டியது அவசியம்.

உலகக் கோப்பைப் போட்டி போதும்

உலகக் கோப்பைப் போட்டி போதும்

சர்வதேச அளவில், உலகக் கோப்பைப் போட்டித் தொடரைத் தவிர வேறு போட்டித் தொடர் இந்தப் போட்டிக்குத் தேவையில்லை என்பது எனது கருத்தாகும்.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போதும்

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போதும்

தற்போது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பைப் போட்டி நடத்தப்படுகிறது. அது தேவையில்லை. ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டி போலே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தினால் போதுமானது என்றார் அவர்.

ஐபிஎல் பயிற்சியாளர்

ஐபிஎல் பயிற்சியாளர்

ஐபிஎல் போட்டிகளில் அது தொடங்கியது முதலே தீவிரமாக ஈடுபட்டிருப்பவர் பிளமிங். தற்போது தடை விதிக்கப்பட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆரம்பம் முதலே இருந்து வருபவர். சர்வதேச அளவில் பிளமிங் 5 டுவென்டி 20 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2வது தாய் வீடு

2வது தாய் வீடு

இந்தியா குறித்து பிளமிங் கூறுகையில் கிட்டத்தட்ட 25 வருடமாக இந்தியாவுக்கு வந்து போகிறேன். எனது இதயத்திற்கு நெருக்கமான நாடு இந்தியா. எனது 2வது தாய் வீடு. அருமையான மனிதர்களை அங்கு சந்தித்துள்ளேன். இந்தியாவை எனது 2வது இல்லம் என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன். வருடத்திற்கு 3 அல்லது நான்கு மாதம் நான் இந்தியாவில்தான் இருக்கிறேன் என்றார் பிளமிங்.

Story first published: Tuesday, November 3, 2015, 11:15 [IST]
Other articles published on Nov 3, 2015
English summary
Squeezing in a Twenty20 game or two has become the norm in a bilateral series but the shortest format of the game should only be played internationally in a World Cup like event held after every four years, feels former New Zealand captain Stephen Fleming who considers India his "second home".
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X