For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாகிட்ட ஒரு கோஹ்லி.. எங்க டீம்ல 15 பேரும் கிறிஸ் கெயில்தான்- வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கொக்கரிப்பு

By Veera Kumar

மும்பை: கிறிஸ் கெயில் சிறந்த வீரர்தான் என்றாலும், எங்களிடம் அவரை போல 15 மேட்ச் வின்னர்கள் உள்ளனர் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி கேப்டன் டேரன் சம்மி தெரிவித்தார்.

இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை டி20 அரையிறுதியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்ற பிறகு பேட்டியளித்தார் சம்மி.

கிறிஸ் கெயில் அப்போட்டியில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து 2வது ஓவரிலேயே அவுட் ஆனதை சுட்டிக்காட்டி, அப்படியிருந்தும் பெரிய டார்கெட்டை விரட்டி பிடித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

10 ரன் குறைவு

10 ரன் குறைவு

பலம் வாய்ந்த இந்தியாவை வீழ்த்தியிருப்பது வெஸ்ட் இண்டீசுக்கு மிகப்பெரிய மன உறுதியை தந்துள்ளது. இந்தியா மேலும் 10 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் நிலைமை கஷ்டமாகியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தோம்.

பிறர் விளையாடினர்

பிறர் விளையாடினர்

கெயில் விரைவில் நடையை கட்டினாலும், சிம்மன்ஸ், சார்லஸ் மற்றும் ரசல் ஆகியோர் பொறுப்பை தாங்கள் எடுத்துக்கொண்டு வெற்றி பெறச் செய்தனர்.

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

டாசில் வெற்றி பெற வேண்டும் என்று கடவுளிடம் நான் வேண்டுதல் வைத்திருந்தேன். ஐந்து போட்டிகளிலும் நானே டாஸ் வென்றது எனக்கே ஆச்சரியம்தான். நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தியா வந்தோம்.

எல்லாமே சாம்பியன்

எல்லாமே சாம்பியன்

19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் உலக சாம்பியன் ஆகியுள்ளது. பெண்கள் கிரிக்கெட்டிலும் எங்கள் அணி பைனலுக்கு முன்னேறியுள்ளது. இதையெல்லாம் உத்வேகமாக கொண்டுதான் ஆடி வென்றோம்.

15 கெயில்கள்

15 கெயில்கள்

வெஸ்ட் இண்டீஸ் அணி என்பது இப்படிப்பட்டதுதான். கிறிஸ் கெயில் நிறைய நெருக்கடிக்கு நடுவே ஆட வேண்டியுள்ளதால் சறுக்குவதாக விமர்சனங்கள் கூறப்படுகிறது. ஆனால் எங்கள் அணியில் கிறிஸ் கெயில் மட்டுமல்ல, 15 பேரும் மேட்ச் வின்னர்கள்தான். இவ்வாறு சம்மி தெரிவித்தார்.

விராட் மட்டுமே

விராட் மட்டுமே

இந்திய அணியில் விராட் கோஹ்லியை மட்டுமே அணி நிர்வாகமும், ஊடகங்களும் ஃபோகஸ் செய்தன. அதற்கேற்ப பிற வீரர்கள் யாரும் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. அரையிறுதியில் மட்டுமே ரோகித் ஷர்மா, ரஹானே ஆறுதலுக்கு ரன் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 1, 2016, 12:38 [IST]
Other articles published on Apr 1, 2016
English summary
"We feel this is this West Indies team against everyone else. Everyone said Chris is under pressure but I said it, we have 15 match winners," said Sammy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X