For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. இடத்த மாத்த போறாங்களாம்... இந்தியா தேர்வாகுமா?

டெல்லி : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் 18 முதல் 22ம் தேதிவரை லார்ட்ஸ் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி தேர்வாகியுள்ள நிலையில், இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் எதிரணிக்கான போட்டி நிலவுகிறது.

World Test Championship final likely to be held in Southampton

இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த இறுதிப்போட்டி தற்போது பல்வேறு காரணங்களால் சௌதாம்டனில் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி முதல் அணியாக தேர்வாகியுள்ளது. இதையடுத்து அந்த அணியுடன் மோதவுள்ள அணிக்கான போட்டியில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையில் போட்டி நிலவுகிறது.

வரும் ஜூன் மாதம் 18 முதல் 22ம் தேதிவரையில் இறுதிப்போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது நிதி நிலைமை உள்ளிட்ட காரணங்களால் சௌதாம்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2 போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்த இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறும்.

Story first published: Thursday, February 11, 2021, 8:36 [IST]
Other articles published on Feb 11, 2021
English summary
WTC finals likely to be held in Southampton from June 18th to 22nd
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X