For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை இப்ப தள்ளி வெச்சிருக்குது ஐசிசி.. என்ன காரணம்?

டெல்லி : வரும் ஜூன் மாதம் 10 முதல் 14ம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் இறுதிப்போட்டி ஏப்ரல், மே மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதன் இறுதிப்போட்டியுடன் முட்டிக் கொள்ளாமல் இருக்க இந்த தள்ளி வைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மச்சான் டார்கெட்டை நான் பார்த்துக்குறேன்.. கடைசி டெஸ்ட் போட்டியில் நடந்த சம்பவம்!மச்சான் டார்கெட்டை நான் பார்த்துக்குறேன்.. கடைசி டெஸ்ட் போட்டியில் நடந்த சம்பவம்!

ஜூன் மாதம் 18ம் தேதி முதல் 22ம் தேதிவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நடத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.

இறுதிப்போட்டி தள்ளிவைப்பு

இறுதிப்போட்டி தள்ளிவைப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் 10ம் தேதி முதல் 14ம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்போதைய புள்ளிகள் பட்டியலில் முதல் 3 இடங்களில் இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் உள்ளன.

ஆஸி தொடர் வெற்றி காரணம்

ஆஸி தொடர் வெற்றி காரணம்

முன்னதாக இரண்டாவது மற்றும் 3வது இடத்தில் இருந்த இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 430 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. தொடர்ந்து 5 டெஸ்ட் தொடர்களில் இந்தியா வென்று முதலிடத்தில் உள்ளது.

வலிமையாக முதலிடத்திற்கு முன்னேறும்

வலிமையாக முதலிடத்திற்கு முன்னேறும்

இந்நிலையில் வரும் 5ம் தேதி துவங்கவுள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட தொடரிலும் இந்திய அணி வெற்றிபெறும் நிலையில் இறுதிப்போட்டிக்கு சிறப்பாக முன்னேறும். இந்த புள்ளிகள் பட்டியலில் இங்கிலாந்து அணி 4வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

420 புள்ளிகளுடன் 2வது இடம்

420 புள்ளிகளுடன் 2வது இடம்

இதேபோல தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளுடன் பெற்ற வெற்றியுடன் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி 420 புள்களுடன் 2வது இடத்தில் உள்ளது. 3வது இடத்தில் 332 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா உள்ளது.

வலிமையாக இந்திய அணி

வலிமையாக இந்திய அணி

இதனிடையே அடுத்ததாக தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா விளையாடவுள்ள நிலையில், அந்த புள்ளிகளும் இந்த தொடருக்காக எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. ஆயினும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா பங்கேற்பது ஏறக்குறைய இறுதி செய்யப்பட்டுள்ளது.

அணிக்கு மேலும் சிறப்பு

அணிக்கு மேலும் சிறப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற இந்த தொடர் ஐசிசி உருவாக்கியுள்ள போதிலும், விராட் கோலி உள்ளிட்ட ஸ்டார் வீரர்களுக்கும் பிடித்தமானதாக அமைந்துள்ளது. இந்த கோப்பையை வெல்வதன்மூலம் தங்களது அணிக்கு மேலும் சிறப்பை சேர்க்க முடியும் என்று முன்னதாக விராட் கோலி உற்சாகம் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, January 25, 2021, 23:15 [IST]
Other articles published on Jan 25, 2021
English summary
Winning ICC Test Championship would be the ultimate cherry on the cake -Virat Kohli
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X