இந்த வேர்ல்டுலேயே பெஸ்ட் கேப்டன் தல தோனி…!! அவரோட கோச் பிளமிங் இருந்தால் சூப்பரோ… சூப்பர்..!

சென்னை: உலகின் சிறந்த அணி, சிறந்த கேப்டன் என்றால் அது தோனி தான் என்று ஆஸி. முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியிருக்கிறார்.

ஐபிஎல் போலவே தமிழகத்தில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. அதில் இளம் வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் டிஎன்பிஎல் தொடர் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன், உலக அளவில் சிறந்த டி 20 தொடர் டிஎன்பிஎல் என்று புகழாரம் சூட்டியுள்ளார். டிஎன்பிஎல் தொடர் குறித்து அவர் கூறியிருப்பதாவது:

சிறந்த ஏற்பாடுகள்

சிறந்த ஏற்பாடுகள்

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் மிகவும் சிறந்த முறையில் நடத்தப்படுகிறது. கிரிக்கெட்டின் பரபரப்பு கொஞ்சமும் குறையாமல் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் எனக்கு எப்போதுமே ஸ்பெஷலான அணி.

சிஎஸ்கே தான் பெஸ்ட்

சிஎஸ்கே தான் பெஸ்ட்

உலகின் பல நாடுகளில் நடைபெறும் டி 20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று இருக்கிறேன். எந்த டி 20 தொடராக இருந்தாலும், அனைத்திலும் சிறந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் தான்.

சிறப்பான கூட்டணி

சிறப்பான கூட்டணி

அதில் குறிப்பாக சிலரை சொல்லலாம். அதாவது கேப்டன் தோனி, கோச் பிளமிங் ஆகியோர் கொண்ட காம்பினேஷனை உலகளவில் நான் எங்கும் பார்த்தது கிடையாது. இந்த காம்பினேஷன் தான் சிறப்பானது.

மிகவும் நேசிக்கிறேன்

மிகவும் நேசிக்கிறேன்

ஓய்வுக்கு பின்னர் உள்ளூர் டி 20 தொடர்களில் நான் பங்கேற்க காரணமே, கிரிக்கெட் மீது கொண்ட காதல் தான். எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை மிகவும் நேசிக்கிறேன். அதனால் தான் அதை சிறந்த முறையில் பயன்படுத்த முடிகிறது. சவால்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். என் வாழ்வில் தோனி, பிளமிங்கிற்கு மிக முக்கிய பங்கு உள்ளது என்றார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
World best combination is csk captain dhoni and coach fleming says, former player shane Watson.
Story first published: Friday, August 16, 2019, 7:42 [IST]
Other articles published on Aug 16, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X