For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை மிஞ்சிய சூப்பர் ஸ்டெம்பிங்… இங்கிலாந்து கீப்பர் அதிரடி… ஆனா பிரச்னையாகி விட்டதே...!

டப்ளின்:அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் போக்ஸ் செய்த ஸ்டெம்ப்பிங் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதோடு, மன்கட் முறையை விட மோசமானது என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கு முன்னதாக அயர்லாந்துடன் ஒரு ஒருநாள் போட்டியில் ஆடியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி வெறும் 198 ரன்கள் மட்டுமே அடித்தது. 199 ரன்கள் என்ற இலக்கை 42வது ஓவரில் எட்டி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வீரர் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என இரண்டிலுமே மிரட்டினார். இங்கிலாந்து அணி இலக்கை எட்டுவதற்கு போக்ஸ் தான் கை கொடுத்தார். 61 ரன்களை குவித்து இங்கிலாந்து வெற்றிக்கு அவர் தான் காரணமாக திகழ்ந்தார்.

RR vs DC: சொதப்பல் பேட்டிங்... அணியின் மானம் காத்த பராக்... டெல்லிக்கு வெற்றி இலக்கு 116 RR vs DC: சொதப்பல் பேட்டிங்... அணியின் மானம் காத்த பராக்... டெல்லிக்கு வெற்றி இலக்கு 116

சூப்பர் ஸ்டெம்பிங்

சூப்பர் ஸ்டெம்பிங்

பேட்டிங்கில் மட்டுமல்லாது, விக்கெட் கீப்பிங்கிலும் பக்காவாக செயல்பட்டு, ஒரு ஸ்டம்பிங் செய்தார். விக்கெட் கீப்பிங்கில் வல்லவரான தோனியையே மிஞ்சும் அளவிற்கு அந்த சம்பவம் இருந்தது. தோனியின் மின்னல்வேக ஸ்டம்பிங் கிரிக்கெட் உலகம் அறிந்தது. ஆனால் அதையே மிஞ்சும் அளவுக்கு அவர் செய்த ஒரு செயல் தான் கிரிக்கெட் உலகின் தற்போதைய ஹைலைட்.

காத்திருந்த போக்ஸ்

காத்திருந்த போக்ஸ்

அயர்லாந்து பேட்ஸ்மேன் ஆன்டி பால்பிர்னே களத்தில் இருந்தார். அவர் எதிர்கொண்ட பந்து, பேட்டில் படாமல் விக்கெட் கீப்பர் போக்சின் கைகளுக்கு சென்றது. பந்தை கீப்பர் போக்ஸ் கையில் வைத்திருந்தார். களத்தில் இருந்து பால்பிரின் கால் எடுக்கும் வரை காத்திருந்து, சாமர்த்தியமாக ஸ்டெம்பிங் செய்தார்.

சர்ச்சையான ஸ்டெம்பிங்

அதாவது பென் போக்ஸோ, பேட்ஸ்மேன் காலை தூக்குவார் என்று தெரிந்து, அது வரை காத்திருந்து ஸ்டம்பிங் செய்திருக்கிறார். அவரின் இந்த அவுட் தான் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டு இருக்கிறது. அயர்லாந்து வீரர் ஆண்ட்ரூ பால்பிரினை பென் போக்ஸ் ஸ்டம்பிங் செய்த வீடியோ இணையத்தில் வெகு வேகமாக பரவி வருகிறது.

இதுவும் மன்கட் தான்

இதுவும் மன்கட் தான்

இந்த விவகாரம், 3வது நடுவரிடம் முடிவுக்காக சென்றது. மிக அதிக நேரம் எடுத்துக் கொண்ட நடுவர்கள் பேட்ஸ்மேன் அவுட் என்று அறிவித்தனர். பென் போக்ஸ் செய்தது முறைப்படி அவுட் என்றாலும், ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் என்று சொல்வார்களே... அதன்படி இது முறையானது அல்ல என்று பலரும் கருத்து கூறியுள்ளனர். ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிராக அஸ்வின் செய்த மன்கட் போன்றது இந்த அவுட் என்று பலரும் விமர்சித்துள்ளனர்.

Story first published: Saturday, May 4, 2019, 19:08 [IST]
Other articles published on May 4, 2019
English summary
'Worse than Mankading' cricket fans slams Ben Foakes after controversial stumping.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X