For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எப்படி இருந்த இவுங்க, இப்படி ஆயிட்டாங்க!

By Veera Kumar

மும்பை: நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள், மிக மோசமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதுபோன்ற வீரர்களை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் கண்காணிப்பு எல்லைக்குள் கொண்டு வந்திருக்கும் என்று நம்பலாம்.

சில வீரர்கள் உலக கோப்பை நடந்தபோதே மாற்றப்பட்டு நல்ல வீரர்கள் களம் கண்டனர். இந்தியாவின் ஷிகர் தவான் அப்படித்தான் அரையிறுதியில் கழற்றிவிடப்பட்டு, ரஹானே கொண்டு வரப்பட்டார்.

இதுபோன்று மோசமாக செயல்பட்ட வீரர்கள் பட்டியல் இதோ:

தவான்

தவான்

முதலில் தவானில் இருந்தே ஆரம்பிப்போம். 4 போட்டிகளில் விளையாடி, வெறும் 43 ரன்கள் எடுத்தார் இந்த ஒப்பனிங் பேட்ஸ்மேன். இதைக்கூட 52 பந்துகளை சந்தித்துதான் எடுக்க முடிந்தது என்றால், இதற்கு பள்ளியில் படிக்கும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனே எவ்வளவோ பரவாயில்லை எனலாம்.

மீசை முறுக்கல்

மீசை முறுக்கல்

ஏதோ ஒரு போட்டியில் அடித்ததும் மீசையை முறுக்கிக்கொள்வது இவரது வாடிக்கை. சொதப்பல் தொடர்வதால் சேவாக் வரிசையில் இந்த ஓப்பனரும் விரைவில் நிரந்தரமாக அணியில் இருந்து வெளியே போக சாத்தியம் உள்ளது.

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

இரண்டாவதும் நம்ம டீமை சேர்ந்தவர்தான். சிஎஸ்கே அணிக்காக மட்டுமே சிறப்பாக ஆடுவார் என்ற பெயரை தகர்க்கும் வகையில், ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 தொடரின் கடைசி போட்டியில் பட்டையை கிளப்பினார் ரெய்னா. அதே ஃபார்மை உலக கோப்பையில் தொடர முடியவில்லை.

இடம் போயிரும்

இடம் போயிரும்

ரெய்னா 4 போட்டிகளில் களம் கண்டு 41 ரன்கள் மட்டுமே அடித்தார். அரையிறுதியில் மட்டுமே ஆடிய ரஹானே 45 ரன்களை விளாசி இவரை முந்திவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படியே ஷாட் பந்துகளுக்கு பயந்தபடி இருந்தால், மனீஷ் பாண்டே, பவன் நெகி ஆகியோரிடம் தனது இடத்தை ரெய்னா பறிகொடுக்க வாய்ப்புள்ளது.

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

ஆஸ்திரேலியாவின் பேட்டிங் முதுகெலும்பாக எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 4 போட்டிகளில் வெறும் 38 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் 3 போட்டிகளில், ஸ்பின் பந்து வீச்சில் வார்னர் அவுட் ஆகியுள்ளார்.

இவரது வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணம், இவரது மோசமான ஷாட் தேர்வு என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.

டேரன் சமி

டேரன் சமி

3 இன்னிங்ஸ்களில் வெறும் 8 ரன்கள் மட்டும் அடித்த டேரன் சமி, பவுலராகவும் ஒன்றும் சாதிக்கவில்லை. 3 ஓவர்கள் பந்துவீசி 31 ரன்கள் கொடுத்து, 1 விக்கெட் மட்டுமே வீழ்த்திய இவரது செயல்பாட்டைப் பார்த்தால், ஆக்ரோஷ மேற்கிந்திய தீவுகளுக்கு இவரா கேப்டன் என்ற ஆச்சரியம் ஏற்படும்.

இயான் மோர்கன்

இயான் மோர்கன்

அனைத்து போட்டிகளிலும் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் மோசமாக சொதப்பினார். முக்கியமான அரை இறுதிப் போட்டியில் முதல் பந்திலேயே டக்-அவுட் ஆனார் மோர்கன். பைனலில் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது மோர்கனால். 6 போட்டிகளிலும் சேர்த்து இவர் அடித்த ரன்கள் வெறும் 66 மட்டுமே. பேட்டிங் மட்டுமல்ல கேப்டன்ஷிப் இன்னும் மோசம். மொயின் அலிக்கு பைனலில் ஓவரே தராத மோர்கன், கடைசி ஓவரை ஸ்டார்க்சுக்கு வீச கொடுத்து கோப்பையை இழந்தார்.

டேல் ஸ்டெயின்

டேல் ஸ்டெயின்

உலக கோப்பையில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்த அவர், 6 ஓவர்களில் 68 ரன்களை வாரி வழங்கியுள்ளார். கடந்த ஐ.பி.எல் போட்டியிலிருந்தே அவரது செயல்பாடு மோசமாகத்தான் உள்ளது. இந்த ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணிக்காக ஆடப்போகும் ஸ்டெயின் செயல்பாடுதான் அவரது கிரிக்கெட் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

முகம்மது இர்ஃபான்

முகம்மது இர்ஃபான்

பாகிஸ்தான் பந்துவீச்சின் மிகப்பெரிய ஏமாற்றம் இர்ஃபான். ஓவருக்கு 9.32 ரன் என்ற சராசரியில் 105 ரன்களை வாரி வழங்கியுள்ளார் இர்ஃபான். இத்தனைக்கு இந்த 7 அடி உயர பவுலர் வீழ்த்தியது, 2 விக்கெட்டுகள்தான்.

மஸ்ரஃபி மோர்டசா

மஸ்ரஃபி மோர்டசா

4 போட்டிகளில் வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்த மோர்டசா, பவுலிங்கிலும் 3 விக்கெட் மட்டுமே எடுத்து சொதப்பினார். இந்தியாவுடனான போட்டி, சாதகமாக சென்று கொண்டிருந்த நேரத்தில், முன்னாலேயே களமிறங்கி விக்கெட்டையும் பறிகொடுத்து இந்தியாவிற்கு சாதகங்கள் செய்து கொடுத்தார்.

அலெக்ஸ் ஹேல்ஸ்

அலெக்ஸ் ஹேல்ஸ்

டி20 தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த அலெக்ஸ் ஹேல்ஸ், சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு சதமும் 7 அரைசதங்களும் விளாசியவர். ஆனால் இந்த உலகக்கோப்பையில் ஓப்பனிங்கில் இறங்கி 5 போட்டிகளில் வெறும் 66 ரன்கள் எடுத்தார்.

லஹிரு திரிமன்னே

லஹிரு திரிமன்னே

நான்கு போட்டிகளில் வெறும் 14 ரன்கள் மட்டுமே அடித்து, இவரை சிபாரிசு செய்து அணியில் சேர்த்துக் கொண்ட கேப்டன், மேத்யூசை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கிவிட்டார் திரிமன்னே. அனைத்துப் போட்டிகளிலும் சொதப்பியதால், நடப்பு சாம்பியன் இலங்கை அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் போனது.

சுலைமான் பென்

சுலைமான் பென்

சுனில் நரைனின் இடத்தைப் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட மேற்கிந்திய தீவுகளின், ஸ்பின்னரான, சுலைமான் பென், இத்தொடரில் 6 போட்டிகளில் 22 ஓவர்கள் பந்துவீசி, 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார்.

டிவில்லியர்ஸ்

டிவில்லியர்ஸ்

இதேபோல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் டி வில்லியர்ஸ், தில்ஷான், அக்மல், பவுலர் அஷ்வின், ஆல்-ரவுண்டர் அப்ரிடி போன்ற வீரர்கள் பலரும் எதிர்பார்த்த அளவு ஆடவில்லை. இளம் வீரர்கள் பலர் எழுச்சி கண்ட நிலையில், முக்கிய வீரர்கள் சொதப்பினர்.

Story first published: Friday, April 8, 2016, 12:18 [IST]
Other articles published on Apr 8, 2016
English summary
Here are the players who had a forgettable World T20 in India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X