For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சென்னை இவ்வளவு மோசமா? கடுமையாக விமர்சனம் செய்த ஆர்ச்சர்.. கோபத்திற்கு காரணம் என்ன?

சென்னை: சேப்பாக்கம் மைதானம் குறித்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு சென்னை ஆடுகளம் குறித்தும் எஸ்.ஜி.பந்து குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் சென்னை ஆடுகளம் குறித்து விமர்சனம் செய்துள்ளார். அவர் முதல் டெஸ்டில் 2 இன்னிங்ஸையும் சேர்த்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

 "சிம்மசொப்பனத்திற்கு டாட்டா காட்டிய சென்னை".. காலியான முக்கிய வீரர்.. இந்திய அணிக்கு செம குட் நியூஸ்

மோசமான பிட்ச்

மோசமான பிட்ச்

பிட்ச் குறித்து பேசிய ஆர்ச்சர், முதல் டெஸ்டின் 5ம் நாளில் சென்னை பிட்ச் நான் பார்த்ததிலேயே மிகவும் மோசமான சர்பேஸாக இருந்தது. ஆரஞ்ச் கலரில், மண் பிளந்து வெளியே வந்து கொண்டிருந்தது. மிகவும் ஹார்டான சர்ஃபேஸ் இருந்ததால் இந்திய அணியை வெல்வது எங்களுக்கு எளிதாக போனது என தெரிவித்துள்ளார்.

ஆர்ச்சர் விலகல்

ஆர்ச்சர் விலகல்

இதனிடையே இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக விலகியுள்ளார். வலைப்பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஸ்டூவர்ட் பிராட் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

முதல் டெஸ்ட் போட்டி இந்திய அணி வீரர்களுக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது. போட்டிக்கு பிறகு பேசியிருந்த கேப்டன் கோலி மற்றும் அஸ்வின், ஆடுகளம் குறித்தும் முதல் போட்டியில் பயன்படுத்தப்பட்ட எஸ்.ஜி பந்து குறித்தும் குற்றம் சாட்டினர்.

2வது டெஸ்ட்

2வது டெஸ்ட்

முதல் டெஸ்ட் போட்டியில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ள நிலையில் சென்னையில் பிப்.13ம் முதல் 2வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதில் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வீரர்களின் குற்றச்சாட்டுகள் சரிசெய்யப்படுமா எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, February 12, 2021, 10:39 [IST]
Other articles published on Feb 12, 2021
English summary
Jofra archer says chepauk 5th day pitch is Worst Surface I Have Ever Seen
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X